Show all

மோடி, அரசியல் அறிவியல் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றவர்

 

     பிரதமர் மோடியின் கல்வித் தகுதி குறித்து சர்ச்சை நிலவி வரும் நிலையில் அவர் குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுநிலைப் பட்டம் பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

 

பிரதமர் மோடி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், கடந்த 1978-ஆம் ஆண்டு தில்லி பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு முடித்ததாகவும் 1983-ஆம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்ததாகவும் கூறியிருந்தார்.

 

இந்நிலையில், பிரதமரின் கல்வித் தகுதி குறித்து புகார்கள் எழுந்துள்ளதால், அவரது கல்வித் தகுதி குறித்த விவரங்களை வெளியிடக் கோரி, மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலுவுக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடிதம் எழுதினார். கேஜரிவால் கோரியுள்ள விவரங்களை அளிக்கும்படி, தில்லி பல்கலைக்கழகத்துக்கும், குஜராத் பல்கலைக்கழகத்துக்கும் மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

 

இதையடுத்து, குஜராத் பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள தகவல்களின்படி, பிரதமர் நரேந்திர மோடி கடந்த 1983 ஆம் ஆண்டு அரசியல் அறிவியல் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும், மோடி 800 மதிப்பெண்களுக்கு 499 மதிப்பெண்கள் எடுத்து 62.3 விழுக்காடு தேர்ச்சியுடன் முதல் வகுப்பில் பட்டம் பெற்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.