Show all

ரூ.3,755 கோடியை விளம்பரத்திற்காக வீணடித்த மோடி அரசு! தகவல்அறியும் உரிமைசட்டத் தகவல்

23,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த  சமூக ஆர்வலர் ராம்வீர் தன்வர் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் தகவல் அறியும் உரிமைசட்டத்தின்  கீழ் அளித்த மனுவின் கீழ்  ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலில் கூறி இருப்பதாவது;

      கடந்த மூன்று ஆண்டுகளில் மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் மற்றும் வெளிப்புற விளம்பரங்களுக்காக ரூ. 37,54,06,23,616 செலவழிக்கப்பட்டு உள்ளது.

      மின்னணு ஊடக விளம்பரங்களில் 1,656 கோடி ரூபாய்க்கு செலவிடபட்டு உள்ளது.  சமூக வானொலி, எண்ணிம திரை, திரைப்படம், இணையம், சேதிகள் மற்றும் தொலைக்காட்சிகளில் இவ்வாறு செலவிடப்பட்டு உள்ளன.

      அச்சு ஊடகங்களில் அரசாங்கம் 1,698 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து உள்ளது.

      வெளிப்புற விளம்பரங்களான   சுவரொட்டிகள், புத்தகங்கள் மற்றும் நாள்காட்டி ஆகியவற்றிற்கு  ரூ.399 கோடிக்கு மேல் செலவழிக்கப்பட்டு உள்ளது என கூறப்பட்டு உள்ளது.

      தலையாய அமைச்சரகங்கள் மற்றும் அரசாங்கத்தின் திட்டங்கள் ஆகியவற்றிற்கு ஒதுக்கப்பட்ட ஆண்டு வரவு செலவுத்திட்டத்திற்கும் மேலாக விளம்பரத்திற்காக செலவழித்த தொகை அதிகமாகும்.

      கடந்த மூன்று ஆண்டுகளில், விளம்பரத்திற்கு அத்தனை கோடிகள் செலவிட்ட போதும், மாசுதடுப்புக்கு  அரசாங்கம் ரூ. 56.8 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்து உள்ளது.

மோடி அரசு விளம்பரத்திற்கு வீணடித்தது அதிகம்; திட்டங்களுக்குச் செலவிட்டது குறைவு.

மோடி மக்களிடம் பிடுங்கியது அதிகம்! மக்களுக்கு வழங்கியது சுழியம்.

      -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,631

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.