Show all

சட்டப்பேரவை வளாகத்திற்குள் மதுக்கடை அமைக்க வேண்டும்: ஜார்கண்ட் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை

23,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சட்டப்பேரவை வளாகத்திற்குள் மதுக்கடை அமைக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள்; விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்தியாவில்தான்!

ஜார்கண்ட்டில் பாஜகவைச் சேர்ந்த ரகுபர் தாஸ் முதல்வராக இருந்து வருகிறார்.

சமீபத்தில் மாநிலத்தில் உள்ள மது கடைகளுக்கான உரிமங்களை ரத்து செய்தது. பின்னர் பொது ஏலம் மூலம் அனுமதிக்கப்பட்ட நகரங்கள் மற்றும் நகரங்களின் புறநகர் பகுதியில் உள்ள மது கடைகளில் மட்டும் இரவு 10 மணி வரை மட்டுமே மது பானங்களை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாநில அரசு கடைகள் ஒரு சில இடங்களில் மட்டுமே இருப்பதால் மது வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும். தேவையற்ற பிரச்னைகளும் கைகலப்புகளும், சச்சரவுகளும் உருவாகும்.

இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் பேரவை வளாகத்திற்குள் மதுபான கடையைத் திறக்க வேண்டும்.

பேரவையின் குளிர்கால கூட்டம் தொடர் வரும் செவ்வாயன்று தொடங்குகிறது. அப்போது தங்களின் இந்த விருப்பத்தையும் தேவையையும் குறித்து முதல்வர் ரகுபர் தாஸின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு பேரவைத் தலைவர் தினேஷ் ஓரானை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

மேலும் அரசு சாரா கடைகள் மூலம் மக்களுக்கு மது விற்பனை செய்யும் அரசு, தஙகளது கோரிக்கைகளை ஏற்று பேரவை வளாகத்திற்குள்ளேயே விற்பனை செய்வதில் என்ன தயக்கம்? என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஆளும் கட்சி சட்;டமன்ற உறுப்பினர்களின் இந்த கோரிக்கைக்கு தலையாய எதிர்கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவும் ஆதரவளித்துள்ளதுடன்,

இதுகுறித்து பேரவையில் விவாதம் எழுப்பப்பட்டால் அது நன்றாக இருக்கும் என்று ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,631

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.