Show all

மனிதநேயம் மைய இலவசப் பயிற்சியில் படித்த 10 பேருக்கு ஆளுமை அதிகாரிகள் பதவி கிடைத்தன

23,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மாநகராட்சித் தலைவர் சைதை துரைசாமி தலைமையிலான மனிதநேயம் மையத்தில் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு வகையிலான நடுவண், மாநில அரசு பணிகளுக்கான தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதுவரையில், இந்த மையத்தில் பயிற்சி பெற்ற 2 ஆயிரத்து 955 பேர் பல்வேறு பணிகளில் உள்ளனர்.

 

இந்த ஆண்டு இந்திய ஆட்சிப்பணி இறுதி தேர்வில் மனிதநேயம் மையத்தில் பயிற்சி பெற்ற 49 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 43 பேர் பணி ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.

அதன்படி ஆளுமைத்துறை அதிகாரிகளாக 10 பேரும், காவல்துறை அதிகாரிகளாக 6 பேரும், வருவாய்த்துறை அதிகாரிகளாக 6 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களுக்கு பல்வேறு பணிகளுக்கான ஒதுக்கீடு கிடைக்க பெற்றுள்ளன.

ஆளுமைப் பணி ஒதுக்கீடு பெற்ற மனிதநேயம் மாணவர்கள் 10 பேரில் எம்.பிரதாப், சி.தினேஷ்குமார், இ.பத்மஜா ஆகிய 3 பேருக்கு தமிழ்நாட்டில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல் சைதை துரைசாமியின் மனிதநேயம் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,631

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.