Show all

மோடி, சித்தராமையா முகத்திரையை கிழித்தார் சிம்பு! கர்நாடக மக்கள் வெளிப்படுத்திய மனிதநேயம்

30,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால், கர்நாடக மக்கள் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற பிம்பத்தை உருவாக்கினார் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், தமிழகத்தின் அனைத்துப் போராட்டங்களுக்கும் வித்திட்;;;;ட இந்தியத் தலைமை அமைச்சர் மோடி.

அதே அச்சத்தை நடுவண் அரசுக்கு நிர்பந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் நியாயத்திற்கு கர்நாடக மக்கள் உடன் படவே மாட்டார்கள் என்பதான பிம்பத்;தை உருவாக்கினார் காங்கிரஸ் கட்சி முதல்வர் சித்தராமையா. 

இந்த பிம்பத்தை மண்ணோடு மண்ணாகத் தகர்த்து, பாஜக காங்கிரஸ் அரசியல்வாதிகளின் கூட்டுக் களவாணித்தனம் காவிரி மேலாண்மை வாரிய நியாயத்தை குழி தோண்டி புதைக்கும் முயற்சி என்பதாக நிறுவி விட்டார் நடிகர் சிம்பு.

காவிரி நீர்ப் பிரச்சினையை காங்கிரஸ், பாஜக அரசியல்வாதிகள் சுயலாபத்துக்காக முடிவுக்கு கொண்டுவராமல் இருக்கிறார்கள். அப்பாவி மக்களிடம் தேவையில்லாமல் வெறுப்புணர்வு அரசியலை வளர்த்து வருகிறார்கள் இந்தப் பிரச்சினையை அரசியலாக பார்க்காமல், மனித நேய பிரச்சினையாக பார்க்க வேண்டும்.

பக்கத்தில் இருக்கும் கன்னட சகோதரர்களிடம் அன்போடு நீரை கேட்க வேண்டும். அப்படி கேட்டால் காவிரி நீர் கண்டிப்பாக தமிழகத்துக்கு கிடைக்கும். காவிரி நீரை தமிழர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு கன்னடர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

இதை உணர்த்தும் வகையில் கன்னட மக்கள் ஒரு குவளை தண்ணீரை கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கு கொடுத்து அதனை காணொளியாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் சிம்பு. 

சிம்புவின் கருத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சிம்புவின் மனித நேய கருத்தை கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிட்டு கன்னடர்களின் ஆதரவை கோரினர். பெங்களூரு தமிழ் நண்பர்கள், பெங்களூரு டாக்கீஸ், பெங்களூரு தமிழ் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட குழுவினர் இந்தக் கருத்தை சமூக வலைத்தளங்களில் பரப்பினர்.

சிம்புவின் கருத்தை கன்னட எழுத்தாளர் சந்திர சேகரும் வரவேற்றார். இதேபோல் மூத்த நடிகர் அனந்த் நாக்கும் சிம்புவை பாராட்டினார். இந்நிலையில் முந்தாநாள் மாலை 3 மணி முதல் 6 மணி வரை பல்வேறு கன்னட அமைப்பினர் பெங்களூரு பேருந்து நிலையங்கள் மற்றும் தொடர்வண்டி நிலையங்களில் தமிழர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தனர்.

இதே போல கன்னட மக்கள் தங்களது வீடுகளின் அருகில் வசிக்கும் தமிழர்களுக்கு ஒரு குவளை நீரை வழங்கினர். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் கன்னடர்கள் தங்களது தமிழ் நண்பர்களுக்கு குடிக்க நீரை வழங்கி அதனை காணெளியாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். மேலும் அனைத்து சமூக வலைதளங்களில்  #மனிதநேயஒற்றுமை என்கிற ஹேஷ்டேக் முன்னிலை ஆனது.

கன்னட அமைப்பினரும், கன்னட நண்பர்களும், ஏராளமான பெண்களும், குழந்தைகளும் மனித நேயத்துடன் அன்பை வெளிப்படுத்தியதை பார்க்கும் போது நெகிழ்ச்சி ஏற்பட்டது. அதிலும் ஒரு பெண் கனிவான குரலில், 'என் மகன் சிம்பு கேட்ட ஒரு குவளை தண்ணீரை தருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த பூமியில் நல்ல மழை பெய்து, காவிரி தாய் செழிப்பாக பாயவேண்டும்' என பேசியது சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி வருகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,756.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.