Show all

தனது முதல் வெற்றியை பதிவு செய்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 11-வது சீசனின் 5-வது போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் கிங்ஸ் வெலவன் பஞ்சாப் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியில் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். 

அதன்படி முதலில் பஞ்சாப் அணி சார்பில் ராகுல் மற்றும் அகர்வால் களமிறங்கினர். 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் முறையாக பஞ்சம் அணி அணைத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியாக பஞ்சாப் அணி 19.2 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் அணி சார்பில் அதிகபட்சமாக ராகுல் 47 ரன்களும், கேப்டன் அஸ்வின் 33 ரன்களும் மற்றும் கருண் நாயர் 29 ரன்களும் குவித்தனர். பெங்களூரு அணி சார்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், கிரிஸ் ஓக்ஸ்,  குல்வந்த் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சாகல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.

அதை தொடர்ந்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. பெங்களூரு அணி சார்பில் அதிகபட்சமாக ஏபி டீ வில்லியர்ஸ் 57 ரன்களும் டீ காக் ௪௫ ரன்களும் குவித்தனர். பஞ்சாப் அணி சார்பில் கேப்டன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல், ரஹ்மான் மற்றும் ஆன்ட்டிரோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள். 

2018 IPL Team Position
Rank TEAM M W L NRR Points
1 SRH 2 2 0 +0.958 4
2 CSK 2 2 0 +0.254 4
3 KKR 2 1 1 +0.195 2
4 KXIP 2 1 1 +0.064 2
5 RCB 2 1 1 -0.068 2
6 RR 2 1 1 -1.065 2
7 MI 2 0 2 -0.233 0
8 DD 2 0 2 -0.851 0

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.