Show all

கார்ப்பரேட் நிறுவனங்களுடன் தலைமைஅமைச்சர் மோடி சந்திப்பு! அடுத்த மாதம் பதிகை செய்யப்படவுள்ள வரவுசெலவுத்திட்டத்தை முன்னிட்டு

அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் இந்திய வரவுசெலவுத்திட்டம் பதிகை செய்யப்பட உள்ளது. அடுத்த மாதம் பதிகை செய்யப்படவுள்ள வரவுசெலவுத்திட்டத்தை முன்னிட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுடன் தலைமைஅமைச்சர் மோடி சந்திப்பு!

23,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் இந்திய வரவுசெலவுத்திட்டம் பதிகை செய்யப்பட உள்ளது. முன்னதாக பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் வரவுசெலவுத்திட்டத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாட்டின் முன்னணி கார்ப்பரேட் நிறுவன அதிபர்களுடன் தலைமைஅமைச்சர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். 

இந்தச் சந்திப்பில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, டாடா குழுமத்தை சேர்ந்த ரத்தன் டாடா, ஏர்டெல் நிறுவனத்தின் சுனில் மிட்டல், தொழிலதிபர்கள் கவுதம் அதானி, ஆனந்த் மகேந்திரா உட்பட பலர் பங்கேற்றனர். மேலும் டாடா நிறுவன தலைவர் சந்திரசேகரன், டி.வி.எஸ். குழும தலைவர் வேணு சீனிவாசன் ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

கடந்த ஐந்தாண்டுகளில் வரி வசூல் நடைமுறைகளில் வெளிப்படை தன்மையை இந்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் எந்தவித அச்சமும் இன்றி தைரியமாக சொத்துக்களை சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சில மோசடி நிறுவனங்கள் மீது இந்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை கார்ப்பரேட் துறைக்கு எதிரான நடவடிக்கையாக பார்க்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,390.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.