Show all

நான்சிரித்தால்! ஹிப்ஹாப் ஆதி, ஐஸ்வர்யா மேனன் நடிப்பில், காதலர் நாளில் வெளியாகிறது

தமிழ்த்திரையில், அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் ஹிப்ஹாப் ஆதியின் புதிய படம் ‘நான்சிரித்தால்’ காதலர் நாளில் திரைக்கு வருகிறது.

23,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஹிப்ஹாப் ஆதியின் புதிய படம், ‘நான் சிரித்தால்’ காதலர்நாளில் வெளியாக உள்ளது.  மீசைய முறுக்கு, நட்பே துணை ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சுந்தர்.சியின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி நடித்திருக்கும் படம் நான் சிரித்தால். 

சங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ராணா என்பவர் நான்சிரித்தால் படத்தை இயக்கியுள்ளார். இவர் இயக்கி மிகவும் பாராட்டு பெற்ற ‘கெக்க பெக்க’ எனும் குறும்படத்தின் தழுவலாக இப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு கதைத்தலைவியாக ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தை காதலர் நாளில்  வெளியிடப் போவதாகக் படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் கே.எஸ்.ரவிகுமார், முனீஸ்காந்த், படவா கோபி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,390.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.