Show all

குஜராத்தின் புதிய முதல்வர் விஜய் ரூபானி

குஜராத் முதல்வராக இருந்த ஆனந்திபென் பட்டேல், கடந்த கிழமை தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அகவை மூப்பு காரணமாக தான் பதவியை விட்டு விலகுவதாக அவர் கூறி இருந்தார். இதனால் அவரது விலகலை பா.ஜ.க தலைமையும் ஏற்றுக் கொண்டது. குஜராத்தின் புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக பலகட்டங்களாக ஆலோசனை நடத்தி வந்த பா.ஜ.க தலைமை, குஜராத்தின் அடுத்த முதல்வராக விஜய் ரூபானியைத் தேர்வு செய்வதாக நேற்று மாலை அறிவித்தது. இதனையடுத்து குஜராத் ஆளுநரை விஜய் ரூபானி இன்று சந்தித்தார். குஜராத் பா.ஜ.க சட்டமன்றஉறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை ஆளுனரிடம் அளித்த அவர், ஆட்சி அமைக்க முறைப்படி உரிமை கோரினார். ஆளுநர் மற்றும் பா.ஜ., தலைமையிடம் ஆலோசனை செய்த பிறகு விஜய் ரூபானி தனது பதவியேற்பு நாளை முடிவு செய்வார் என கூறப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.