Show all

மம்தா டெல்லியில் வியுகம்! பாஜகவிற்கு எதிரான மாநிலக் கட்சிகளின் வலிமையான கூட்டணியை உருவாக்க

14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மாநிலக் கட்சிகளின் வலிமையான கூட்டணியை உருவாக்கி பாஜகவை வீழ்த்துவதற்காக, மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி டெல்லியில் முகாமிட்டுள்ளார்.  

பாஜகவின் எதிர்ப்பு ஆற்றல் மையங்களான, சத்ருகன் சின்ஹா, யஸ்வந்த் சின்ஹா, அருண்சோரி ஆகியோரையும் மம்தா சந்தித்து பேசுகிறார். தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த மாநிலக் கட்சிகளின் வலிமையான கூட்டணியை உருவாக்கும் முயற்சிகள் தீவிரம் அடைந்துள்ளன. 

டெல்லி சென்றுள்ள மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, திமுக. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர்களைச் சந்தித்து பேசினார். இன்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை மம்தா பானர்ஜி சந்தித்து பேசுகிறார். 

மோடியை மிகக் கடுமையாக விமர்சித்து வரும் சத்ருகன் சின்ஹா, யஸ்வந்த் சின்ஹா, அருண்சோரி ஆகியோரையும் மம்தா சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,740

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.