Show all

2500000 இழப்பீடு கோரி வழக்கு! அதிமுக கட்சி, கொடி, சின்னம் மீட்பு முயற்சியில் ஈடுபட்டிருக்கும் தினகரன் மீது எடப்பாடியார்

14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அதிமுக கட்சி, கொடி, சின்னம் ஆகியவற்றை மீட்கும் முயற்சியாக, அதிமுகவின் புதிய அணியாக 'அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற அமைப்பை தினகரன் தொடங்கினார். அப்போது அந்த அமைப்புக்கான கொடியையும் அவர் வெளியிட்டார்.

அந்தக் கொடி, அ.தி.மு.க. கொடியைப் போல உள்ளது என்று சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் முதல்அமைச்சரும், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் கொடி, அ.இ.அ.தி.மு.க.வின் கொடியைப் போல கருப்பு, சிவப்பு, வெள்ளை நிறத்தில் உள்ளது. அ.தி.மு.க.வின் கொடியை போல வடிவமைப்பை கொண்ட கொடியை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று எங்கள் கட்சியின் 4-வது விதி தெளிவாக கூறுகிறது. எனவே, அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் உருவாக்கியுள்ள புதிய கொடியை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். அ.தி.மு.க.வின் கொடியில் உள்ள நிறங்களைப் பயன்படுத்தியதற்காக, ரூ.25 லட்சம் எங்களுக்கு இழப்பீடு வழங்க தினகரனுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறயிருந்தார்.

இந்த வழக்கு அறங்கூற்றுவர் சி.வி.கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தினகரன் பதில் மனு பதிகை செய்தார். அதில், அ.தி.மு.க.வின் கொடியைப் போல தன்னுடைய அமைப்பின் கொடியை வடிவமைக்கவில்லை என்றும் தேவையில்லாமல், அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,740

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.