Show all

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் என்று பெயர் மாற்றம்

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

பிரதமர் நரேந்திர மோடி தலைமயில் இன்று நடுவண் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாட்டில் உள்ள பல்வேறு விமான நிலையங்களின் பெயர்களை மாற்றுவது தொடர்பான முடிவு உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

 

அதன்படி, மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் என்றும், பாம்பே உயர்நீதிமன்றம் மும்பை உயர்நீதிமன்றம் என்றும், கல்கத்தா உயர்நீதிமன்றம் கொல்கத்தா உயர்நீதிமன்றம் என்றும் பெயர் மாற்றம் செய்யப்படும் என்று நடுவண் உள்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.