Show all

ஆட்சி அதிகார மமதையில் துணிந்து குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள்

07,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கையில் ஈடுபட்டு 48 பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்குகளை எதிர்கொண்டு வருவது, மக்களாட்சி சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்களாட்சி சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 1,580 பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்; மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் 48 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கையில் ஈடுபட்டது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. 48 பேரில் 45 பேர் சட்டமன்ற உறுப்பினர்கள், 3 பேர் பாராளுமன்ற உறுப்பினர்கள்.

அதிகபட்சமாக பாஜக கட்சியை சேர்ந்த 12 பேர் மீதும், சிவசேனாவை சேர்ந்த 7 பேர் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் 6 பேர் மீதும் பெண்களுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தலின் போது பதிகை செய்யப்பட்ட பிராமண பத்திரத்தை ஆய்வு செய்ததில் இத்தகவல் தெரியவந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,763.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.