Show all

வத்தலக்குண்டு அருகே பரபரப்பு! டாஸ்மாக்கை எதிர்த்து பெண்கள் நடத்தும் பல கட்ட போராட்டங்கள்

07,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வத்தலக்குண்டு அருகே கணவாய்பட்டியில் உள்ளது ஆசிரமம் காலனி. இங்கு சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள கண்மாய் அருகே புது டாஸ்மாக் மதுபானக்கடை அமைப்பதற்கான கட்டிட வேலை நடந்து வருகிறது. டாஸ்மாக் பணி தொடங்குவதற்கு முன்பே ஆசிரம காலனி மக்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து முறையிட்டனர். அதன்பின்பும் டாஸ்மாக் கட்டிட வேலை தொடர்ந்ததால் வத்தலக்குண்டு காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஆயினும், டாஸ்மாக் பணிகளை நிறுத்திய பாடில்லை.

அடுத்த கட்டமாக ஆசிரம காலனி பெண்கள், டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர், ஊராக சென்று சுவரொட்டி ஒட்டி வருகின்றனர். வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, கணவாய்பட்டி, ஜி.தும்மலப்பட்டி உள்பட பல ஊர்களில் பெண்கள் போஸ்டர் ஒட்டுவதை ஏராளமானேர் திரண்டு பார்த்து ஊக்குவித்து வருகின்றனர். இதுகுறித்து ஆசிரம காலனியை சேர்ந்த அன்னம்மாள் கூறுகையில், எந்தச் சூழ்நிலையிலும் டாஸ்மாக் கடையை திறக்க விட மாட்டோம். உடனே பணிகளை நிறுத்தி கட்டியதை அகற்ற வேண்டும். இல்லையேல் எங்கள் ஆதார், குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் அடுத்த கட்ட போராட்டத்ததில் ஈடுபடுவோம் என்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,763. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.