Show all

அமெரிக்கா நாளிதழ் மோடியைக் கிழித்து தொங்க விட்டது! பெண்கள் பாதிப்பு பிரச்சனைகளில் அமைதியாகிவிடுவாராம்

06,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அடிக்கடி ஏதாவது கீச்சு பதிவிட்டு தன்னை திறமையான தலைவராக காட்டிக்கொள்ளும் இந்தியத் தலைமை அமைச்சர் மோடி, பெண்களுக்கும், சிறுபான்மையினருக்கும் ஒரு பிரச்சனை என்றால் அமைதியாகிவிடுகிறார் என்று அமெரிக்க நாளிதழான நியூயார்க் டைம்ஸ் தன்னுடைய தலையங்கத்தில் எழுதியுள்ளது.

இந்தியாவில் தற்போது அடுத்தடுத்து பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வுகள் அதிகரித்து வருகின்றன. பெண்கள் மோசமாக கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். அதேபோல் சிறுபான்மையின மக்களும் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள்.

இதிலெல்லாம் பாஜக கட்சியினரும் எதோ ஒரு வகையில் தொடர்பில் இருக்கிறார்கள். இதற்கு எதிராக மோடி ஒரு சொல்லைக் கூட உதிர்க்க வில்லை யென்று நியூயார்க் டைம்ஸ் தன்னுடைய தலையங்கத்தில் எழுதியுள்ளது.

பாஜக கட்சியை சேர்ந்தவர்களும், அதற்கு அடித்தளமான இயக்கத்தில் இருப்பவர்களும் இதுபோன்ற மோசமான செயலை செய்கிறார்கள். சில நாட்களுக்கு முன் காஷ்மீரில் 8 வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டதற்கு எதிராக மக்கள் போராடிய போதும் கூட மோடி அமைதியாகவே இருந்தார். பாஜக கட்சியினர் ஏதாவது தவறு செய்தால் மோடி அமைதியாகிவிடுகிறார் என்றுள்ளனர்.

மேலும் இத்தனைக்கும் மத்தியில் இந்தக் குற்றத்தை செய்தவர்களுக்கு ஆதரவாக நடக்கும் ஊர்வலத்தில் பாஜக கட்சியினர் கலந்து கொள்கிறார்கள். பாஜக கட்சியை சேர்ந்த வழக்;கறிஞர்கள், காவல்;துறை குற்றப் பதிவு செய்ய விடாமல் கூட தடுக்கிறார்கள். இதேபோல் உத்தரபிரதேசத்தில் பாஜக சட்டமன்றஉறுப்பினர் ஒரு பெண்ணை வன்புணர்வு செய்த வழக்கிலும், மோடி பேசவேயில்லை. இதில் அந்த பெண்ணின் தந்தை காவல்;துறை விசாரணையில் மரணம் அடைந்து இருக்கிறார் என்று எழுதியுள்ளது.

மேலும் மோடி கடைசியில், இது இந்தியாவிற்கு பெரிய அவமானம் என்று பேசினார். ஆனால் அவரது வெறுமையான பேச்சு வந்ததே நீண்ட நாட்களுக்கு பின்தான். இதேபோல்தான் பாஜக கட்சியினர் சிறுபான்மையின மக்களை பசுக்களின் பெயரை சொல்லி கொலை செய்த போதும் மோடி அமைதியாக இருந்தார் என்று குற்றச்சாட்டு வைத்துள்ளது.

மோடியின் அமைதி பழைய இந்திய அரசாங்கத்தை நினைவுப்படுத்துகிறது. டெல்லியில் மாணவி வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட போது முந்தைய காங்கிரஸ் அரசு பேசாமல் அமைதியாக இருந்தது. தேர்தலில் அது எதிரொலித்து. 

மோடி, இயல்பாக மக்களிடம் உரையாடக்கூடிய அரசை உருவாக்குவார் என்றுதான் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் அவரோ அமைதியாக இருக்கிறார் என்று நியூயார்க் டைம்ஸ் தன்னுடைய தலையங்கத்தில் எழுதியுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,762.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.