Show all

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு

03,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மெர்சல் படத்திற்கு தமிழிசை சவுந்தரராஜனைத் தொடர்ந்து நடுவண் இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான மெர்சல் திரைப்படத்தில் 28 விழுக்காடு சரக்குமற்றும் சேவைவரி வசூலிக்கும் இந்தியாவில் மருத்துவ வசதிகள் ஏன் இலவசமாக செய்து தரப்படவில்லை என்று ஒரு வசனம் இடம்பெற்றுள்ளது. நடுவண் அரசின் திட்டம் குறித்து வசனங்கள் மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் அதனை நீக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறிஇருந்தார்.

இதே போன்று பாஜக மேலவை உறுப்பினர் இல. கணேசனும் நடுவண் அரசு குறித்து கருத்துகளை மக்கள் நடுவே பரப்பினால் ஹிந்துக்கள் மெர்சலாகிவிடுவார்கள் என்று கூறி இருந்தார்.

இந்நிலையில் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய நடுவண் இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மெர்சல் படத்தில் மோடி அரசுக்கு எதிரான வசனங்கள் இடம்பெற்றிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். படத்தில் இடம்பெற்றுள்ள மோடி அரசுக்கு எதிரான வசனங்களை நீக்க வேண்டும்.

தான் சார்ந்திருக்கும் துறையைப் பயன்படுத்தி மக்கள் நடுவே குழப்பத்தை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேடக்கூடாது என்றும் அவர் கூறினார்.

-உண்மையிலேயே உங்கள் ஆட்சி மக்களுக்கானதாக இல்லை என்பது உங்கள் அச்சத்திலிருந்தே தெரிகிறதே அடிவருடி கும்பல்களே!

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்

அடிதழீஇ நிற்கும் உலகு.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.