Show all

எச்.ராஜா என்பவரின் மிரட்டல் கீச்சுப்பதிவு!

பிஎப்ஐ மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் அனுசரணையாக நடப்பது தமிழ்நாடு அரசுக்கு ஆபத்தாக முடியும். எனவே நாளை பிஎப்ஐக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவோர் மீதுநடவடிக்கை தேவை என அடாவடி காட்டியுள்ளார் கீச்சுப்பதிவில் எச்.ராஜா என்பவர்.

12,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: இந்தியாவின் பேரறிமுக முற்றம் என்கிற அமைப்பற்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளதால்- தமிழ்நாடு அரசு, அந்த அமைப்பு தமிழ்நாட்டில் காணப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால், திமுக தமிழ்நாட்டின் ஆட்சியிலிருந்து நீக்கப்படும் என்று தமிழ்நாடு பாஜக கிளைக் கட்சியைச் சேர்ந்த எச்.ராஜா என்பவர் வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளார். 

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையில் இந்திய அமைதிப்படைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் போர் நடைபெற்றபோது, இந்தியத் தலைமைஅமைச்சராக சந்திரசேகர் இருந்த போது அவரது அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருந்தவர் சுப்பிரமணியன்சாமி. 

திமுகவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருக்கிறது; தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது; தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அரசின் கமுக்கங்களை திமுக அரசு கசியவிட்டது என்று கூறி அரசியல் சாசனம் 356-வது பிரிவை பயன்படுத்தி கருணாநிதி தலைமையிலான திமுக அரசின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதனை இன்றுவரை தனது சாதனை என்று பீற்றிக் கொள்பவர் சுப்பிரமணியன் சாமி. 

இந்தியாவின் பேரறிமுக முற்றம் அமைப்பின் மீது நேற்று ஒன்றிய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து அந்த அமைப்பினர் கைது செய்யப்பட்டும் வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் அந்த அமைப்பினர் யாராவது காணப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக கட்சியைச் சேர்ந்த  எச்.ராஜா என்பவர் எச்சரித்து அடாவடி காட்டியுள்ளார். 

இது தொடர்பாக எச்.ராஜா தனது கீச்சுப் பதிவில், 1991ல் எல்.டி.டி.ஈ க்கு அரசு தகவல் கசிய விட்டதற்காக கருணாநிதி ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. எனவே தற்போது தடை செய்யப்பட்டுள்ள பிஎப்ஐ மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் அனுசரணையாக நடப்பது தமிழக அரசிற்கு ஆபத்தாக முடியும். எனவே நாளை பிஎப்ஐக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவோர் மீதுநடவடிக்கை தேவை என அடாவடி காட்டியுள்ளார். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,386.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.