Show all

சீனா முறையீடு! மூடிய அறையில் காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசிக்கும் ஐநா பாதுகாப்பு குழு

காஷ்மீர் விவகாரம் குறித்து தற்போது ஐநாவின் பாதுகாப்பு குழுவின் ஆலோசனை மூடிய அறையில் நடத்தப் பட்டு வருகிறது. ஊடகங்களுக்கு அனுமதியோ பதிவு செய்கின்ற நடவடிக்கையோ கிடையாது. மொத்தமாக 5 நிரந்தர உறுப்பினர்கள் உட்பட 15 நாடுகள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டுள்ளன.

31,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து ஐநாவின் பாதுகாப்புக் குழுவின் விசாரணைக்கு சீனா முறையீடு செய்திருக்கிறது.

காஷ்மீர் விவகாரம் குறித்து தற்போது ஐநாவின் பாதுகாப்பு குழுவின் ஆலோசனை மூடிய அறையில் நடத்தப் பட்டு வருகிறது. ஊடகங்களுக்கு அனுமதியோ பதிவு செய்கின்ற நடவடிக்கையோ கிடையாது. மொத்தமாக 5 நிரந்தர உறுப்பினர்கள் உட்பட 15 நாடுகள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டுள்ளன.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புத் தகுதிகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்கியுள்ளது நடுவண் அரசு. மேலும் காஷ்மீரை இரண்டாக பிரித்துக் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நடந்த அதிரடி மாற்றங்கள் குறித்து ஐநாவில் முறையிட உள்ளதாக பாகிஸ்தான் முடிவு எடுத்தது. அதேபோல் ஐநா பாதுகாப்பு குழுவிலும் முறையிட போவதாக பாகிஸ்தான் அறிவித்தது. ஐநா பாதுகாப்பு குழுவுக்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து கடிதமும் அளித்துள்ளது. 

பாகிஸ்தானைத் தொடர்ந்து தற்போது சீனாவும் ஐநா பாதுகாப்புக் குழுவில் முறையிட்டு இருக்கிறது. அதன்படி காஷ்மீர் விவகாரம் குறித்து தனியாக விசாரிக்க வேண்டும் என்று சீனா ஐநா பாதுகாப்பு குழுவில் கோரிக்கை வைத்தது.

இந்த கோரிக்கையை தற்போது ஐநா பாதுகாப்புக் குழு ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கு முதன்மைக் காரணம் ஐநா பாதுகாப்பு குழுவில் சீனா நிரந்தர உறுப்பினர். ஐநா பாதுகாப்பு குழு ஆலோசனையில் தற்போது சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டிஷ், அமெரிக்கா ஆகிய நாடுகள் இருக்கின்றன.

அதன்படி காஷ்மீரில் நடக்கும் பிரச்சனை குறித்து இன்று ஐநாவின் பாதுகாப்பு குழுவில் ஆலோசனை நடத்தி வருகிறது. 5 நிரந்தர உறுப்பினர்கள், 10 உறுப்பு நாடுகள் உட்பட 15 நாடுகள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டுள்ளன. தனியாக இந்த 15 நாடுகள் மட்டும் இந்த பிரச்சனை குறித்து ஆலோசித்து வருகின்றன. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,246.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.