Show all

அறங்கூற்றுவர் ரமணா விலகல்! தன்மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்க, தலைமை அறங்கூற்றுவர் அமைத்த மூவர் குழுவில் இருந்து

உச்சஅறங்கூற்றுமன்றத்  தலைமை அறங்கூற்றுவர் ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் புகாரை விசாரிக்க, தலைமைஅறங்கூற்றுவர் அமைத்த மூவர்  கொண்ட விசாரணை குழுவில் இருந்து அறங்கூற்றுவர் ரமணா விலகி உள்ளார்.

 

12,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: உச்சஅறங்கூற்றுமன்றத்  தலைமை அறங்கூற்றுவர் ரஞ்சன் கோகாய் அகவை 64 மீது அவரிடம் உதவியாளராக பணியாற்றிய 35 அகவை பெண் ஊழியர் பாலியல் புகார் கூறியது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

1. அறங்கூற்றுத்துறையை கட்டுப்படுத்த முயற்சிப்பவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். இவர்களை கண்டுபிடிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். பணம் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் அறங்கூற்றுத்துறையை ஒரு போதும் கட்டுப்படுத்த முடியாது என்று கடுமையான எச்சரிக்கையை உச்சஅறங்கூற்றுமன்றத்  தலைமை அறங்கூற்றுவர் ரஞ்சன் கோகாய் தெரிவித்தார்.

2. இதுபற்றி விசாரிக்க அறங்கூற்றுவர் எஸ்.ஏ. பாப்டே தலைமையில் அறங்கூற்றுவர் ரமணா, அறங்கூற்றுவர் இந்திரா பானர்ஜி ஆகிய மூவர் கொண்ட விசாரண குழுவை தலைமை அறங்கூற்றுவர் அமைத்துள்ளார்.

3. ஆனால் இந்தக் குழுவை நியமனம் செய்ததற்கு எதிராக 259 பெண் வழக்;கறிஞர்கள், அறிஞர்கள், மகளிர் குழுக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த சிலர் உச்சஅறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளனர். அந்த கடிதத்தில், நேர்மையான தனி நபர்களை கொண்டு ஒரு சிறப்பு குழு அமைத்து அந்த குழு 90 நாட்களுக்குள் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை பதிகை செய்ய வேண்டும் என்றும் அதுவரை பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தலைமை அறங்கூற்றுவர் ரஞ்சன் கோகாய், அறங்கூற்றுமன்றத்தில் எந்த அலுவலக பணியும் மேற்கொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

4. தலைமை அறங்கூற்றுவர் ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரில் சதி உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த முன்னாள் அறங்கூற்றுவர் ஏ.கே.பட்நாயக் தலைமையிலான ஒரு குழுவும் அமைத்துள்ளார் தலைமை அறங்கூற்றுவர். மேலும் இந்தக் குழுவுக்கு நடுவண் குற்றப்புலனாய்வுத்துறை, உளவுத்துறை, டெல்லி காவல்துறை ஆகியோர்  முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப் பட்டுள்ளது.

5. இந்த நிலையில், எஸ்.ஏ. பாப்டே தலைமையில் தலைமைஅறங்கூற்றுவர் தன்னை விசாரிக்க அமைத்த இந்த குழுவில் இருந்து அறங்கூற்றுவர் ரமணா விலகியுள்ளார்.  அவர் தனிப்பட்ட முறையில் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளார்.

அதற்கான காரணமாக இந்திய தலைமை அறங்கூற்றுவர் ரஞ்சன் கோகாய் தனது நெருங்கிய நண்பர் என்றும் அவர் தனக்கு ஒரு குடும்ப உறுப்பினர் போன்றவர் என்றும் அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவேன் என்றும் அறங்கூற்றுவர் ரமணா கூறியுள்ளார்.  

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,133.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.