Show all

கதைத்தலைவன் யோகிபாபுவை பேய்களிடம் இருந்து யாசிகா காப்பாற்றும் படம் ஜாம்பி!

யாசிகா யோகிபாபுக்கு என்ன உறவு என்பதுதான்; படத்தின் உச்சகட்டமாம். இந்த நிலையில் இந்தப் படத்தில் யோகிபாபுவுக்கு கதைத்தலைவியாக யாசிகா நடித்து வருவதாக சில ஊடகங்களிலும் தங்கையாக நடித்து வருவதாக சில ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி வருகிறது.

 

12,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நகைச்சுவை நடிகர் யோகிபாபு, கதைத்தலைவனாக நடிக்கும் படம் ஜாம்பி. இந்தப் படத்தின் கதை இரவில் தொடங்கி காலையில் முடியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. யோகிபாபுவின் நண்பர்கள் மூவர் மகாபலிபுரம் சாலையில் உள்ள ஒரு பேய்பங்களாவில் மாட்டிக்கொள்ள அவரைக் காப்பாற்ற செல்லும் யோகிபாபுவும் அந்த பங்களாவில் சிக்குகிறார். அதன் பின்னர் யோகிபாபு உள்ளிட்ட நால்வரையும் யாசிகா எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை. 

யாசிகா யோகிபாபுக்கு என்ன உறவு என்பதுதான்; படத்தின் உச்சகட்டமாம். இந்த நிலையில் இந்தப் படத்தில் யோகிபாபுவுக்கு கதைத்தலைவியாக யாசிகா நடித்து வருவதாக சில ஊடகங்களிலும் தங்கையாக நடித்து வருவதாக சில ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி வருகிறது. 

இதுகுறித்து பேட்டி அளித்த இந்த படத்தின் இயக்குனர் புவன்நல்லான், யோகிபாபுவுக்கு யாசிகா கதைத்தலைவியும் இல்லை, தங்கையும் இல்லை, என்று புதிர் போடுகிறார்.

யோகிபாபு, யாஷிகா, மனோபாலா, கோபி, சுதாகர், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். எஸ்3 பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தப் படம் பார்க்க இன்னும் ஒரு அறுபது நாட்கள் காத்திருக்க வேண்டுமாம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,133.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.