Show all

அட! தலைமைஅமைச்சர் படம் இருக்கிறதா என்று பார்ப்பதற்குத்தான் இந்த ஆய்வா

தெலுங்கான மாநிலத்தில,; குடும்ப அட்டைக்கு உணவுப்பொருள் வழங்கும் கடை ஒன்றியல் திடீர் ஆய்வு மேற்கொண்ட நிர்மலா சீதாராமன், அங்குள்ள பதாகையில் ஏன் தலைமைஅமைச்சர் மோடி படம் இல்லை என மாவட்ட ஆட்சியர் ஜிதேஷ் பட்டீலிடம், வினா எழுப்பினார். 

18,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெலங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டம், பீர்கார் பகுதியில் உள்ள குடும்ப அட்டைக்கு உணவுப்பொருள் வழங்கும் கடையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்குள்ள பதாகையில் ஏன் தலைமைஅமைச்சர் மோடி படம் இல்லை என மாவட்ட ஆட்சியர் ஜிதேஷ் பட்டீலிடம், நிர்மலா சீதாராமன் கேட்டார். 

குடும்ப அட்டைக்கு உணவுப்பொருள் வழங்கும் கடை பதாகையில், தலைமைஅமைச்சர் மோடி படம் வெளியிடப்படாமைக்குச் சினமடைந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒன்றிய அரசு சார்பில் மக்களுக்கு மாதாமாதம் வழங்கப்படும் அரிசிக்கு மாநில அரசைப் போல பத்துமடங்கு ஒன்றிய அரசு பங்களிப்பதாகவும், ஆனால் தெலங்கானாவில் இந்த அரிசியை மாநில அரசே மக்களுக்கு வழங்குவதாக கூறிக் கொள்கிறது என்று தெரிவித்தார்.

இது குறித்தும் மற்றும் கொரோனா காலகட்டத்தில் ஒன்றிய அரசு அரிசியை இலவசமாக வழங்கியது. ஆனால், மாவட்ட ஆட்சியருக்கு இது குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். 

மேலும் மாலைக்குள், குடும்ப அட்டைக்கு உணவுப்பொருள் வழங்கும் கடை பதாகையில், தலைமைஅமைச்சர் மோடி படத்தை இடம்பெறச்செய்ய வேண்டும். இல்லையேல் நானே பதாகை வைப்பேன். இந்திய ஆட்சிப் பணித்துறை படிப்பு படித்து, ஒன்றிய அரசுக்கு விசுவாசமாக, நியாயமாக நடந்துகொள்ள வேண்டும். புரிகிறதா? என கூறினார். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,360.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.