Show all

மோடியை மன்னிப்பு கேட்க வைக்கும் காங்கிரசின் முயற்சி வெல்லுமா

27,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: குடிஅரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பாராளுமன்ற மாநிலங்களவையில் நடைபெற்ற மோடியின் காங்கிரஸ் கலாய்ப்பு உரையின் போது,

காங்கிரஸ் மூத்த உறுப்பினர் ரேணுகா சவுத்ரி சத்தமாக சிரித்தார். இதனால் கோபம் அடைந்த மேலவைத் தலைவர் வெங்கையா நாயுடு, ‘‘உங்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் டாக்டரை போய் பாருங்கள்’’ என்று ரேணுகா சவுத்ரியை பார்த்து கூறினார்.

அவர் இவ்வாறு கூறியதை கேட்டு மோடி, ‘‘அவரை கட்டுப்படுத்தாதீர்கள். ராமாயண தொடரில் கேட்ட சிரிப்புக்கு பிறகு இப்போதுதான் அப்படி ஒரு சிரிப்பை கேட்க முடிந்தது’’ என்றார். (ராமாயணத்தில் சூர்ப்பனகையின் சிரிப்பை குறிப்பிடும் வகையில் அவர் இவ்வாறு மறைமுகமாக குறிப்பிட்டதாக கருதப்படுகிறது)

ஆட்சேபகரமான வகையில் பேசிய மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஆனந்த் சர்மா வற்புறுத்தி இருக்கிறார்.

இதேபோல் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவும் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளார்.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,693

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.