Show all

கூகுளுக்கு ரூ1358600000 அபராதம் விதித்தது போன்று- காங்கிரஸ், பாஜகவிற்கும் விதிக்க வேண்டும்

27,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கூகுள் நிறுவனத்துக்கு 135.86 கோடி ரூபாய் அபராதம் விதித்து இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இன்றைய இளைய தலைமுறையினர் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரும் தங்களுக்கு தேவையான தகவல்களுக்கு உடனே நாடுவது கூகுள் தேடுபொறி. அந்த அளவுக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய தேடுபொறியாக கூகுள் திகழ்ந்து வருகிறது.

இதற்கிடையே, பிரபல திருமண சேவை இணைய தளம் ஒன்று வலைதளமான கூகுள் தேடு பொறியில் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையத்தில் புகார் அளித்திருந்தது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், விசாரணை முடிவில் கூகுள் நிறுவனம் பாரபட்சமாக நடந்து கொண்டதாக ஆணையம் உறுதிபடுத்தியது. இதையடுத்து அந்த நிறுவனத்திற்கு ரூ.135.86 கோடி அபராதம் விதித்து இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக, போட்டி கண்காணிப்பு ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில், கூகுள் தேடல்களின் நடைமுறைகளில் ஈடுபடுவதைக் கண்டறிந்தது, அவ்வாறு செய்வதன் மூலம், அதன் போட்டியாளர்களுக்கும் பயனர்களுக்கும் பாதிப்பு விளைவிக்க கூடும் என தெரிவித்துள்ளது.

மேலும், இந்த அபராத தொகையினை 60 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுவண் அரசு அரசியல் அமைப்புச் சட்டப்படி தேசியமொழி என்;று ஒன்றே இல்லை; சமமாக மதிக்கக் கூடிய 22 அலுவல் மொழிகள் தாம் உண்டு. ஆனால் இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பாக இருந்தே, காங்கிரசும், பாஜகவும் ஹிந்தியை மட்டுமே தூக்கிப் பிடித்து எனைய பாரம்பரியமான இந்திய மொழிகளின் வளர்ச்சிக்குத் தடையாய் இருக்கின்றனர். காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் கொட்டு வைக்க ஏதாவது அமைப்பு இது போன்று இருந்தால் தேவலாம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,693

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.