Show all

வங்கிக் கணக்கில்லாத கிராமவாசிகளுக்கு ஏடிஎம் அட்டை

     பிகார் மாநிலத்தில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த ஜமூய் மாவட்டத்தில் வங்கிக் கணக்கில்லாத கிராமத்தினருக்கு ஏடிஎம் அட்டைகள் கிடைத்தது எப்படி? என்பது குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை காவல் துறை அமைத்துள்ளது.

     அங்குள்ள அச்சம்பாவ் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பத்தினருக்கு அஞ்சல் மூலம் ஏடிஎம் அட்டைகள் கிடைத்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிஜோரியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியிலிருந்து அனுப்பப்பட்ட இந்த ஏடிஎம் அட்டைகளைப் பெற்ற கிராமவாசிகள் அந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கவில்லை.

     தகவலறிந்த ஜமூய் காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளனர். இந்தக் குழுவின் விசாரணை அறிக்கைக்கேற்ப, காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பர். பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 தாள்கள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட பிறகு பணத் தட்டுப்பாட்டை சந்தித்து வரும் மாவோயிஸ்டுகள் ஏடிஎம் அட்கைளை அனுப்பினரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.