Show all

எப்போதும் எடுக்கலாம் பணம் மையத்தில் காத்திருந்த பெண்ணுக்கு பிறந்தது ஆண் குழந்தை

த்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் ஜின் ஜாக் நகரில் வசிப்பவர் சர்வேசா தேவி. நிறைமாத கர்ப்பிணியான இவர் செலவுக்கு பணம் எடுப்பதற்காக அங்குள்ள எப்போதும் எடுக்கலாம் பணம் மையத்திற்கு சென்றார். எப்போதும் எடுக்கலாம் பணம் மையதத்தில் ஏற்கனவே கூட்டம் அதிகம் நின்றிருந்தது. சர்வேசா தேவியும் அவர்களுடன் வரிசையில் நின்றிருந்தார். நீண்ட நேரம் கால் கடுக்க காத்திருந்தார்.

     அப்போது திடீர் என்று சர்வேசா தேவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அந்தப்  பெண்ணை உடனே அருகில் உள்ள மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அந்தப் பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு தாயும் குழந்தையும் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டனர்.

இந்தச் செய்தி உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

     எப்போதும் எடுக்கலாம் பணம் மையத்தில்  வரிசையில் நின்ற போது குழந்தை பெற்றதால் அந்தப் பெண்ணுக்கு உத் தரப்பிரதேச அரசு சார்பில் ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்தார். இதற்கான காசோலை உடனடியாக சர்வேசா தேவியிடம் வழங்கப்பட்டது.

     ஏற்கனவே வங்கிகள், எப்போதும் எடுக்கலாம் பணம் மையங்களில் பணம் எடுப்பதற்காக வரிசையில் நின்ற போது யாராவது இறந்தால் அவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்து இருந்தார். தற்போது கர்ப்பிணிக்கும் வழங்க உத்தரவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.