Show all

தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் இந்தியா! இலங்கை குறித்த வெளியுறவுக் கொள்கையில்

31,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சீன ராணுவத்திற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து இந்தியா ராணுவ தளபதி நாளை இலங்கைக்கு பயணிக்க உள்ளாராம்.

இலங்கை அரசு தன்னுடைய நாட்டில் உள்ள ஹம்பாந்தோட்டா என்ற துறைமுகத்தை சீன ராணுவத்தின் கப்பல் படை பிரிவுக்கு 99 ஆண்டுகால குத்தகைக்கு விட்டுள்ளது. இது இந்திய பகுதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என இந்தியா இலங்கை அரசிடம் கவலை தெரிவித்ததாம். 

அதற்கு பதில் அளித்த நேர்மையின் ஊற்றுக்கண்ணான இலங்கை அரசு இந்த துறைமுகம் ராணுவ தளமாக பயன்படுத்தப்படாது எனவும், இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடாது எனவும் தெரிவித்திருந்ததாம்.

இந்தியா இலங்கை இடையே தமிழர் ஒழிப்பு நடவடிக்கையில் இதே சீனாவோடும் மேலும் பத்து நாடுகளோடும் பதினொன்றாவதாக உறவுநிலை மேற்கொண்ட போது, இநதியா விரல் சூப்பிக் கொண்டே உதவிக்குப் போனதாம். தற்போது சீனாவின் வருகையை அடுத்து இந்தியா மலர் வகுப்பு முடித்து, முதல் வகுப்புக்கு தேர்ச்சி பெற்று விட்டதாம். 

இருநாடுகளிடையே ராணுவ ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக இந்திய ராணுவ தளபதி பிபின்ராவத் நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளாராம். சுற்றுப்பயணத்தின் போது அவர் இலங்கையின் ராணுவ தளபதிகளை சந்திக்க உள்ளதாகவும், மேலும் அரசியல்தலைவர்களையும் சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

ராணுவ தளபதி தன்னுடைய சுற்றுப்பயணத்தின் போது கண்டி மற்றும் திரிகோணமலையில் உள்ள ராணுவ அதிகாரிகளையும் சந்தித்து பேச உள்ளார். தொடர்ந்து தியாத்தாலாவவில் அமைந்துள்ள ராணுவ அகாடமிக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கையில் தமிழீழம் அமைந்தால் இந்தியாவிற்கு தமிழீழம் நட்பு நாடாக அமையுமா? அல்லது தமிழர் ஒழிந்த இலங்கை இந்தியாவிற்கு நட்பு நாடாகத் தொடருமா என்கிற தொலைநோக்கு இல்லாமல், தமிழர் விரோத ஆரிய ஒட்டுண்ணிகள் ஆலோசனையில், சீனத்தீப்பந்தத்தை தலையில் சொருகிக் கொண்டு தமிழர் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு வேதியியல் ஆயுதங்களை வழங்கினர் காங்கிரஸார். 

காங்கிரசுக்கு, ஆலோசனை வழங்கிய  நடுவண் அரசு நிருவாகத்தில் இருக்கிற தமிழர் விரோத ஆரிய ஒட்டுண்ணிகள், இப்போது பாஜக நடுவண் அரசுக்கு என்ன மாதிரி ஆலோசனைகளை வழங்கி இலங்கை குறித்த வெறியுறவுத் தொடர்பில் இன்னும் என்னென்ன சிக்கல்களை இழுத்து விடப் போகிறது என்று பார்ப்போம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,787. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.