Show all

ராயுடு மற்றும் வாட்சனின் அதிரடியால் ஐதராபாத்தை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றை உறுதி செய்தது சென்னை

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 11-வது சீசனின் 35-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் புனே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து  முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் சேர்த்தது. ஐதராபாத் அணி சார்பில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 79 ரன்களும், கேன் வில்லியம்சன் 51 ரன்களும் குவித்தனர். சென்னை தரப்பில் ஸ்ரதுல் தாகுர் 2 விக்கெட்டுகளையும் தீபக் சாகர் மற்றும் பிராவோ தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.  

இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் வாட்சன் மற்றும் அம்பதி ராயுடு ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும்  ஐதராபாத் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். சிறப்பாக விளையாடிய வாட்சன் 57 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் ஆனார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13.3 ஓவரில் 134 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து வந்த ரெய்னா 2 ரன்னில் ஆட்டமிழக்க 3-வது விக்கெட்டுக்கு அம்பதி ராயுடு உடன் டோனி ஜோடி சேர்ந்தார். இருவரும் சென்னை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் 19 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அம்பதி ராயுடு 100 ரன்களுடனும், டோனி 20 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் காலத்தில் இருந்தனர். இந்த வெற்றி மூலம் பிளேஆஃப் சுற்றை உறுதி செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ். 

2018 IPL Team Position
Rank TEAM M W L NRR Points
1 SRH 12 9 3 +0.400 18
2 CSK 12 8 4 +0.383 16
3 KXIP 11 6 5 -0.056 12
4 KKR 12 6 6 -0.189 12
5 NI 11 5 6 +0.529 10
6 RR 11 5 6 -0.484 10
7 RCB 11 4 7 -0.261 8
8 DD 12 3 9 -0.478 6

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.