Show all

போக்குவரத்து காவலர்களிடம் பணம் வழங்காமல், கடன் ஆதாய அட்டைகள் மூலம் அபராதம் செலுத்தும்முறை

31,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: போக்குவரத்து காவலர் உடனடி அபராதம் பெறுவதால் பல தவறான தகவல்கள் மற்றும் பிரச்சினைகள் வருவதால் போக்குவரத்து காவலர்களிடம் பணம் வழங்காமல் கடன் மற்றும் ஆதாய அட்டைகள் மூலம் அபராதம் வசூலிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் அறியும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்த போக்குவரத்து காவலர் சென்னை அண்ணா சாலையில் விளம்பரப் பதாகை வைக்கப்பட்டுள்ள 

போக்குவரத்து காவல்துறையினர் கொண்டு வந்துள்ள நேரடி பணமில்லா அபராதம் செலுத்தும் முறை சற்று தேவலாம் என்று சொல்லப் படுகிறது. இதைத் தொடர்ந்து தேவைக்கு அதிகமான பணம் கையில் வைத்திருக்கும் போக்குவரத்து காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக வாகன ஓட்டிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகள் இருந்து வந்தன. இதற்கு தீர்வு காணும் வகையில் போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் ஏ.அருண், இணை ஆணையர் ஆர்.சுதாகர் ஆகியோர் நேரடி பணமில்லா அபராதம் செலுத்தும் முறையை கொண்டு வந்தனர். அதன்படி, அபராதம் விதிக்கும் போக்குவரத்து காவலரிடம் தொகையை வழங்க வேண்டியதில்லை. மாறாக அஞ்சலகம், பேடிஎம், இ சேவை மையம் உள்பட 6 இடங்களில் செலுத்தலாம். இந்த திட்டத்தை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நான்கு நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். 

இதுகுறித்து இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் கூறும்போது, 'சில நேரங்களில் பணம் வசூல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே காவலர்கள் வழிமறிக்கின்றனர். இந்த புது நடைமுறையால் தேவையில்லாமல் போக்குவரத்து காவலர்கள்  வழிமறிக்கமாட்டார்கள் என்றார்.

காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறும்போது, 'லஞ்சம் வாங்குவதும் குற்றம், கொடுப்பதும் குற்றம். போக்குவரத்து காவலர் லஞ்சம் வாங்கினால் புகார் தெரிவிக்கலாம். புகார் உண்மை எனில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். கூடுதல் காவல் ஆணையர் ஏ.அருண் கூறும்போது, 'சென்னையில் கடந்த ஆண்டு விபத்தில் 1,347 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதை நாங்கள் வழக்காக பார்பது இல்லை. மதிப்புமிக்க உயிராக பார்க்கிறோம். இதனால்தான் சில நேரங்களில் கடுமையாக நடந்து கொள்கிறோம். அதனால், விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது என்றார்.

அவசரத் தேவைக்காக காவலர் பணம் வைத்திருந்தால் எவ்வளவு பணம் தங்களிடம் உள்ளது, ரூபாய் தாளின் வரிசை எண் உள்ளிட்டவற்றை கையில் வைத்திருக்கும் குறிப்பேட்;டில் குறித்து வைக்க வேண்டும். அப்படி இல்லாமல் அதிகமான பணத்துடன் பிடிபட்டால் அதுகுறித்து விசாரிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,787.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.