Show all

இந்திய மக்கள் சிரிக்கிறார்கள்! பாடு பொருள்: நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை

07,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் அலோக் வெர்மா நீக்கப்பட்டதற்கு அவர் ரபேல் ஊழல் குறித்த விவரங்களை கேட்டதுதான் காரணம் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. கோடிக்கணக்கில் சொத்துக்களை முறைகேடாக குவித்த இறைச்சி ஏற்றுமதி செய்து வந்த தொழிலதிபர் மொயின் குரேஷியின் வழக்கில் நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை அமைப்பு வழக்கு பதிவு செய்து இருக்கிறது. 

இன்று அதிகாலை 2 மணிக்கு, நடுவண் குற்றப் புலனாய்வுத் துறைசிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் அலோக் வெர்மா இருவரும் விடுப்பில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் அலோக் வெர்மா மாற்றப்பட்டதற்கு பின் பல காரணமும் இருப்பதாக புகார் வந்துள்ளது. 

நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் அலோக் வெர்மா, ரபேல் ஊழல் குறித்து விசாரிக்க மிகவும் தீவிரம் காட்டினார். இதற்கான உச்ச அறங்கூற்றுமன்றத்தில் நடந்து வரும் விசாரணை குறித்த ஆவணங்களை ஏற்கனவே வாங்கி இருந்தார். அதேபோல் ரபேல் ஊழலில் பிரசாந்த் பூஷன் உள்ளிட்ட மனுதாரர்கள் அளித்த ஆதாரங்களையும் திரட்டி விசாரிக்க முடிவு செய்து இருந்தார். இதற்காக தனி விசாரணை அணியை உருவாக்கும் திட்டத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதோடு நிற்காமல் இவர் மோடியிடமும், நடுவண் அரசிடமும் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை கேட்டு இருக்கிறார். ஒரு மாதம் முன் இவர் ரபேல் ஒப்பந்தம் குறித்த ஆவணங்களை கேட்டது எல்லோருக்கும் தெரியும். இந்த ஆவணங்களை இதுவரை மோடி, நிர்மலா சீதாராமன், அனில் அம்பானி உள்ளிட்டவர்கள் மட்டுமே பார்த்து இருக்கிறார்கள். அதைத்தான் இவர் விசாரிக்க எண்ணி கேட்டார். 

இந்த பரபரப்பான சூழ்நிலையில ;தான் இவர் காலவரையற்ற கட்டாய விடுப்பில் செல்ல வேண்டும் என்று மோடி உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். இதற்கு முழுக்க முழுக்க காரணம், ரபேல் ஊழல் என்று எதிர்க்கட்சிகள் எல்லோரும் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்கள். 

இவரது விடுப்பிற்கு எதிராக பதிகை செய்யப்பட்டு இருக்கும் மனுவில் கூட இது முதன்மைத்துவமாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் அலோக் இடத்தில் நியமிக்கப்பட்டு இருக்கும் நாகேஸ்வர் ராவ் மோடிக்கும் பாஜகவினருக்கும் மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்பட்டு இருக்கிறது. இன்று மதியம் 2 மணிக்கு பதவி ஏற்றுள்ள நாகேஸ்வர் ராவ் மீது ஏற்கனவே சில லஞ்ச புகார்கள் இருக்கிறது. இவர் முதல் வேலையாக செய்தது, நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவிற்கு எதிரான லஞ்ச வழக்கை விசாரித்த அதிகாரிகளை இடமாற்றியதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,950.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.