Show all

இந்தியக் குடியரசு நாள்

10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்தியக் குடியரசு நாள் இந்திய ஆட்சிமைக்கான ஆவணமாக இந்திய அரசு சட்டம் 1935 இன் மாற்றாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளாகும்.

இந்திய அரசுச் சட்டம்,1935 (தமிழ்தொடர் ஆண்டு5036) என்பது பிரித்தானிய இந்தியாவில் அரசியல் சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்காக ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டம். இதன் மூலம் இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு இந்தியர்களுக்கு மேலதிக தன்னாட்சி உரிமைகள் வழங்கப்பட்டன.

இந்திய அரசுச் சட்டம்,1919 (தமிழ்தொடர் ஆண்டு5020) இன் படி பிரித்தானிய இந்தியாவில் இரட்டை ஆட்சி முறை ஏற்படுத்தப்பட்டது. ஆட்சிப் பொறுப்பில் சில துறைகள் இந்தியர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. பத்து ஆண்டுகள் கழித்து இவ்வாட்சி முறையினை ஆய்வு செய்த சைமன் குழு இந்தியர்களுக்கு மேலும் பல ஆட்சி உரிமைகளை அளிக்கப் பரிந்துரை செய்தது. 1931-1932 ல் (தமிழ்தொடர் ஆண்டு 5033) இது குறித்து பிரித்தானிய அரசுக்கும் இந்தியர்களுக்கும் இடையே வட்ட மேசை மாநாடுகள் நடைபெற்றன. இம்மாநாடுகளில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை யென்றாலும், பிரித்தானிய அரசு, அடுத்த கட்ட சீர்திருத்தங்களை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியது. இதன் பலனாக 1935 (தமிழ்தொடர் ஆண்டு5036) அரசுச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் முக்கியக் கூறுகள்:

இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு, மாகாண சுயாட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது; இந்தியர்களின் தன்னாட்சி உரிமைகள் அதிகரிக்கப்பட்டன. ஆனால் மேலாட்சி அங்கீகாரம் தரப்படவில்லை

பிரித்தானிய இந்தியாவும், மன்னர் அரசுகள் (சம்ஸ்தானங்கள்) ஆகியவை இணைந்து ஒரு “இந்தியக் கூட்டாட்சியினை உருவாக்க வழிவகை செய்யப்பட்டது

தேர்தல்களில் வாக்குரிமை பெறுவதற்கான சொத்துடமைத் தகுதிகள் தளர்த்தப்பட்டன. வாக்காளர்களின் எண்ணிக்கை இதனால் அதிகமானது

இந்தியாவின் மாகாணங்கள் புனரமைக்கப்பட்டன. பர்மா மற்றும் ஏடன் இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டன. சிந்த் பம்பாய் மாகாணத்திலிருந்து பிரிக்கபபட்டது. பீகார் மற்றும் ஒரிசா புதிய மாகாணங்களாக உருவாக்கப்பட்டன.

மாநில சட்டமன்றங்கள் விரிவுபடுத்தப்பட்டு அவற்றில் இந்திய உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

ஆட்சிப் பொறுப்பில் மேலும் பல துறைகள் இந்தியர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால் மாநில ஆளுனருக்கும், வைசுராயுக்கும் தடுப்பாணை அதிகாரம் வழங்கப்பட்டது.

தேசிய அளவில் அறங்கூற்றுமன்றம் ஒன்று உருவாக்கப்பட்டது.

இப்புதிய சட்டத்தின் அடிப்படையில் 1937ல் (தமிழ்தொடர் ஆண்டு5038) தேர்தல்கள் நடத்தப்பட்டு அரசுகள் அமைந்தன. ஆனால் மன்னர் அரசுகளின் எதிர்ப்பாலும், இந்திய தேசிய காங்கிரசு-முசுலிம் லீக் வேறுபாடுகளாலும் இந்தியக் கூட்டாட்சி அமைப்பு உருவாக்கம் நிறைவேறவில்லை.

 

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு- எந்த அயல் இயல்களும் இந்தியாவில் நுழைவதற்கு முன்னம், தமிழர்களே இந்தியாவின் ஒட்டுமொத்த நாகரிக மாந்தராக விளங்கி வந்தனர்.

இந்தியா என்பது பாரதம் என்ற பெயரிலோ இந்தியா என்ற பெயரிலோ அதுவரை யாராலும் அழைக்கப்பட்டிருக்கவில்லை.

குமரிக் கண்டம் முதல் இமயம் வரை தமிழர் தாராளமாக தாம் புழங்கி வந்த பகுதியை நாவலந்தேயம் என்று அழைத்தனர்.

அது உலகம் முழுவதும் தமிழருக்கு வணிகத் தொடர்பு இருந்த காலம். உலகினரில் தமிழர் மட்டுமே முதல் கடலோடியாய் உலகம் முழுவதும் கப்பல் கட்டி வணிகம் புரிந்து வந்தனர். மயில்தோகை, முத்து, மிளகு, ஏலம், மெல்லிய துணிவகைகள், யானைத் தந்தம் போன்றவை தமிழர் வணிகப் பொருட்களாய் இருந்தன.

எகிப்து மகாராணி உலகப் பேரழகியாக வரலாறு வர்ணிக்கிற கிளியோபாட்ரா, தமிழகதது முத்தை பாலில் ஊறவைத்து அந்தப் பாலை பூசிதான் குளிப்பாராம். அவருக்கு தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகள் தெரியுமாம். தமிழில் உள்ள வானவியல் செய்திகளை ஆர்வமுடன் கற்றாராம்.

இதற்காக எகிப்து நாட்டு அறிஞன் தாலமி, எகிப்து நாட்டு வளத்தை தமிழ் வணிகர்கள் சுரண்டிச் செல்வதாக சாடுகிறான்

இது நாவலந்தேய தமிழரின் கடல்கடந்த வணிகத் திறத்திற்கானதொரு சான்றாகும். தமிழர் சென்று வணிகம் புரிந்து வந்த நாடுகள் எல்லாம்

தமிழர் இருப்பிடத்தை அறிய ஆர்வம் கொண்டிருந்த காலம்.

உலகினர் தமிழர் நாகரிகக் கூறுகளில் மலைத்திருந்த காலம்.

இந்தியா குறித்து ‘நாவலந்தேயம் என்ற அறிமுகம் மட்டுமே இருந்தது.

அதைத்தான் உலகினர், ந்தேயம் -ந்தேயா - INDIA என்று பதிவு செய்தனர்.

அமெரிக்காவில் ஐரோப்பியர் இந்தியாவைத் தேடியதும் அதன் பொருட்டே.

வடவர்கள் இந்தியா என்ற சொல்லை விரும்ப மாட்டார்கள். ஹிந்தியில் குறிப்பிடும் போது (ரூபாய் நோட்டில்) பாரதிய ரிசர்வ் பைங் என்றே இருக்கும். பாரதஸ்டேட் பைங் பாரதிய ஜனதா கட்சி என்பனவற்றை ஒப்பு நோக்கி உணரலாம்.

அப்படி இப்படி என்று நீண்ட காலத்திற்குப் பிறகு வாசுகோடகாமா இந்தியாவைத் தேடி வந்தடையும் போது-

ஆரியர் அராபியர் மகமதியர் எல்லாம் நுழைந்து கலந்து விட்டதால்,

அவர்கள் வணிகத் தொடர்புக்காகத் தேடிவந்த நாவல INDI யம் இல்லை. நாகரிகத் தமிழர் இல்லை.

போர்ச்சுகீசியர்கள், முதன் முதலாக இந்தியாவின் கடலோரப் பகுதிகளான கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பே போன்ற இடங்களில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர். இவர்களைத் தொடர்ந்து, டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள், பிரெஞ்சுகாரர்களும் என இந்தியாவில் வணிக முகாம்களை ஏற்படுத்திக்கொண்டு வாணிபத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் குடியேறிய அனைத்து ஐரோப்பியர்களும், வணிகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டாலும்,

பிரிட்டிஷ்காரர்கள் மட்டும் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒன்றை நிறுவி நிரந்தரமாக வணிகத்தில் ஈடுபட்டதோடு, இந்திய மன்னர்களிடம் இருந்த ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி, படிப்படியாக தங்களுடைய ஆதிக்கத்தை விரிவுபடுத்தி, இந்தியாவை முழுமையாகத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தார்கள். குறுகிய காலத்திற்குள் இந்தியாவைத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த பிரிட்டிஷ்காரர்கள், இந்திய வளத்தை சுரண்டியது மட்டுமல்லாமல், மக்களை அடிமையாக்கி கொடுங்கோல் ஆட்சி புரியத் தொடங்கினார்கள்.

இந்தியாவில் ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகங்களையும் தமது தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவுக்கூரும் நாள், குடியரசுநாள் ஆகும்.

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் (29,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5049) இந்தியா விடுதலைப் பெற்றது. இந்திய விடுதலைக்குப் பிறகு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் (13,தை,தமிழ்தொடர்ஆண்டு-5051) குடியரசு நாளாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், அத்திருநாளில் தமது தாய் நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, இந்திய மண்ணில் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவுக்கூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் நாட்டுப்பண் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.

குடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துகொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது. “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு என மிகச்சரியாக குடியரசு என்ற சொல்லுக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க குடிஅரசு தலைவர் ஆபிரகாம் லிங்கன். அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு விடுதலை பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.

இந்திய விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் நாள் (13,தை) இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசுநாள் கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் நாள் (13,தை) இந்திய திருநாட்டை மீட்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் நாட்டுப்பண் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. விடுதலை பெற்ற பிறகு விடுதலை இந்தியாவின் முதல் பிரதமர் என்ற சிறப்பு பெற்ற ஜவர்ஹலால் நேரு அவர்களின் முன்னிலையில் முதல் குடியரசு நாள் அணிவகுப்பு நடைபெற்றது.

இந்தியா விடுதலை பெற்றது 1947, ஆகஸ்ட் 15 (29,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5049) என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதற்கு முன்பே இந்தியா விடுதலைநாள் கொண்டாடியிருக்கிறது.

1930 ஆம் ஆண்டு, ஜனவரி 26ஆம் தேதி அன்று (13,தை,தமிழ்தொடர்ஆண்டு-5031) நாடு முழுவதும் விடுதலைநாள் கொண்டாட வேண்டும் என காந்தியடிகள் வேண்டுகோள் விடுத்தார். அந்த நாள்தான் இந்தியா விடுதலை பெற்ற பின் குடியரசு நாளாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.

லாகூரில் கூடிய அகில இந்திய மாநாட்டில், ‘பூரண சுயராச்சியமே நமது நாட்டின் உடனடியான இலட்சியம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைச் செயல்படுத்துவதற்கான போராட்டம் குறித்து காந்தியே முடிவுசெய்து அறிவிப்பார் என்று மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தக் காலகட்டத்தில் நாட்டில் பொருளாதார மந்த நிலை நிலவியது. வறுமை மக்களை வாட்டி எடுத்துக்கொண்டிருந்தாலும் விடுதலை எழுச்சியும் கனன்றுகொண்டிருந்தது. அதன் விளைவாகப் பல வன்முறைப் போராட்டங்கள் நடந்தன. இந்நிலையில் மீண்டும் சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடங்கினால் அது மேலும் வன்முறைக்கே வழிவகுக்கும் என்று காந்தி கருதியதால், தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்புவதற்கான வழியாக, அதன் முதல் கட்டமாக, நாடு முழுவதும் ஜனவரி 26ம் தேதி 1930 அன்று (13,தை,தமிழ்தொடர்ஆண்டு-5031) அமைதியாகச் விடுதலைநாள் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதன்படி அன்று நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்தி வழங்கிய விடுதலைநாள் அறிவிப்பை எடுத்துரைத்தனர்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் மேற்கொண்ட அந்த உறுதிமொழியின் வாசகம் இதுதான்:

பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டிற்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம்

விடுதலை பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய விடுதலை நாள்தான் ஜனவரி 26. (13,தை) விடுதலை பெற்ற பின் அந்த நாளைக் குடியரசு நாளாக, அதாவது மக்களாட்சி மலர்ந்த நாளாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்தது. 1950 (தமிழ்தொடர்ஆண்டு 5031) முதல் இது குடியரசு நாளாக கொண்டாடப்படுகிறது. இதுதான் குடியரசு நாள் தோன்றிய வரலாறு.

28 ஆம் நாள் ஆகஸ்து மாதம் 1947 (12,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5049) ஆண்டு ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4 ஆம் நாள் (18,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5049) அரசியமைப்பு சட்டவாக்கயவையில் சமர்ப்பித்தது.

2 ஆண்டுகள், 11 மாதங்கள், 166 நாட்கள் பொது திறந்த அமர்வுகளில், சந்தித்து அரசியலமைப்பின் ஏற்புக்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக சனவரி 24 ஆம் நாள் 1950 ஆம் ஆண்டு (11,தை,தமிழ்தொடர்ஆண்டு-5031) 308 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது.

அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து, விடுதலை பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய விடுதலை நாளான சனவரி 26ஆம் நாளை, (தை13) மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது.

நடுவண் அரசை ஆண்டு வரும் காங்கிரஸ் கட்சியும். பாஜகவும் ஹிந்தி மொழியை மட்டுமே முன்னெடுத்து, ஹிந்தி பேசுகிறவர்கள் மட்டுமே கல்வி, ஊடகம், நிறுவனங்கள், அலைக்கற்றைக

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.