Show all

10 லட்சத்திற்கு வேண்டியதை செய்யும் ஜீ பூம் பா பூதம் விற்பனைக்கு? உண்மையாகவா?

கொல்கத்தாவில் உள்ள பவுகாத்தி(Baguiati ​​​​​​) நகரில் வசிக்கும் 'ராய் சவுதிரி ' என்பவருக்கு தனது நண்பரிடமிருந்து ஒரு கால் வந்துள்ளது. அந்த நண்பர் தனக்கு தெரிந்தவர்களிடம் ஒரு பாட்டிலில் 'பூதம்' இருப்பதாகவும் , அதனை அடைந்துவிட்டால் நீங்கள் இட்ட அனைத்து கட்டளைகளையும் செய்து முடிக்கும் எனவும் , உங்கள் கனவுகளை எல்லாம் நனவாக்கும்  எனவும் தெரிவித்துள்ளார். உங்களுக்கு பூதம் வாங்க விருப்பம் இருந்தால் நான் யார் பூதத்தை விற்கிறார்களோ அவர்களிடம் அழைத்து செல்வதாக கூறியுள்ளார். ராய் சவுத்திரி அவரது இன்னொரு நபர் "பசுடேப் குண்டு" என்பவரிடம் ஆலோசனை செய்த பிறகு , அதனை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து , பூதத்தை விற்பதாக கூறிய நபரே ராய் சவுதிரிக்கு கால் செய்து , பூதத்தின் விலை 10 லட்சம் எனவும் , உங்களிடம் பணம் மற்றும் விருப்பம் இருந்தால் மட்டும் வெஸ்ட் பெங்காலில் உள்ள புர்ட்வன் நகருக்கு வரும்படி அழைத்துள்ளனர்.

இதனையடுத்து , ராய் சவுத்திரியும் அவரது நண்பரும் (பசுடேப் குண்டு)  அந்த கும்பல் அழைப்பு விடுத்த இடமான பர்துவான்(Burdwan)(வெஸ்ட் பெங்கால்) நகருக்கு சென்றுள்ளனர். அங்கிருந்த 4 நாலு பேர் அவர்கள் இருவரையும் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய ஒரு வாகனத்தில் ஹோட்டலுக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு ,ஒரு ருபாய் நாணயம் அடைக்கப்பட்ட  ஒரு குளிர்பான பாட்டிலை காண்பித்து இதில் தான் அந்த பூதம் உள்ளது என கூறியுள்ளனர். உடனடியாக பணத்தை கொடுங்கள் என்றும் கூறியுள்ளனர். இதுவாடா , பூதம்னு சந்தேகமடைந்த ராய் சவுத்திரி தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார் . இதனால் கோபமடைந்த அந்த கும்பல் ராய் சவுத்திரியிடம் இருந்த 600 ரூபாயையும் பறித்துவிட்டு ஒரு அறையில் பூட்டிவைத்துள்ளனர்.

ஒரு வழியாக பர்டவானில் உள்ள இன்னொரு நண்பருக்கு கால் செய்து நடந்ததை கூறி உதவி கேட்டுள்ளார். அந்த நபர் போலீசை நாடியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை அந்த 4 பேரையும் கைது செய்தது.

ஜனவரி  18 ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 19 ஆம் தேதி இரவே பெயிலில் வெளியே வந்துள்ளனர்.

பூதம் என்றால் குழந்தைகளே நம்ப மறுக்கும் இந்த காலத்தில் , ஏழு கழுதை வயதான 'ராய் சவுத்திரிக்கு ஏன் நம்பினார் என்று தெரியவில்லை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.