Show all

லஞ்சம் வாங்குவதில் இந்தியா முதலிடம்; இந்தியாவில் கடந்த 12 மாதங்களில் லஞ்சம் அதிகரிப்பு

லஞ்சம் வாங்குவதில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக, லட்சம் பற்றி ஆய்வு மேற்கொண்ட  நிறுவனம் தெரிவித்துள்ளது. 16ஆசிய பசிபிக் நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

     இதில் பொது சேவைகளைப் பயன்படுத்திய 10 இந்தியர்களில் 7 பேர் லஞ்சம் கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

     ஆசியா பசிபிக் நாடுகளில் ஊழல் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கையை, சர்வதேச வெளிப்படை நிறுவனம் பெர்லினில் இன்று வெளியிட்டது. இதற்காக சுமார் 22,000 பேரிடம் ஊழல் குறித்த அனுபவங்கள் கேட்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

     இந்தியாவில், இந்த ஆய்விற்குப் பதிலளித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர்-

     இந்தியாவில் கடந்த 12 மாதங்களில் லஞ்சம் அதிகரித்துள்ளதாக 40 விழுக்காடு பேர்கள் கூறியுள்ளனர்;

மோடிக்கு பாராட்டுக்கள்!

     இந்தியாவில் லஞ்சம் கொடுப்பவர்களில் 73 விழுக்காடு பேர்கள் எழைகள் எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     இந்தியா மற்றும் சீனா உட்பட 16 ஆசிய பசிபிக் நாடுகளில், சுமார் 90 கோடி மக்கள் (அதாவது 4 பேரில் ஒருவர்), லஞ்சம் கொடுத்து பொது சேவைகளைப் பெறுகின்றனர்.      இந்தியாவிற்கு அடுத்து அதிகப்பட்சமாக வியட்நாமில் 65 விழுக்காடு பேர்கள் லஞ்சம் அளிப்பதாகக்  கூறியுள்ளனர்.   ஆய்வு மேற்கொண்ட நாடுகளில் சப்பான் தான் குறைந்த  லஞ்ச விழுக்காடு உள்ள நாடு என தெரிய வந்துள்ளது. அங்கு வெறும் 0.2 விழுக்காடு மட்டுமே லஞ்சம் கொடுப்பதாக கூறியுள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.