Show all

நாங்கள் இந்தியாவில்தான் இருக்கோமா? சந்தேகமா இருக்கு நொச்சிக் குப்பம் மீனவர் கொதிப்பு

வங்காள தேசத்திற்கு ஆதரவாக பாகிஸ்தான் மீது போர் தொடுத்த இந்தியா-

     தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை மீது இந்தியா ஏன் போர் தொடுக்க கூடாது என்று நொச்சிக் குப்பம் மீனவர் கோரியுள்ளனர்.

     ராமேசுவரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டத்தைக் கண்டித்து மயிலாப்பூர் நொச்சிக் குப்ப மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

     நொச்சிக் குப்பம் மீனவ சங்கத்தின் செயலாளர் ருபேஷ் கூறியதாவது:

தமிழக மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மற்றொரு மீனவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இலங்கை அரசு இப்படி அட்டூழியம் செய்து வருகிறது. ஆனால் இந்திய அரசு இதனை கண்டு கொள்வதாக தெரியவில்லை.

     பேச்சுவார்த்தை நடத்துகின்றோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எந்த நல்ல முடிவையும் இந்திய அரசால் தமிழக மீனவர்களுக்கு கொடுக்க முடியவில்லை. இதனால் இந்தியாவில்தான் இருக்கின்றோமா என்ற கேள்வி தமிழக மீனவர்கள் மத்தியில் எழுகிறது.

     தமிழகம் முழுவதும் இருக்கின்ற மீனவ கிராமங்களை ஒன்று திரட்டி தமிழகத்தில் உள்ள 5 வர்த்தக துறைமுகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போகிறோம். வருமானம் வரும் விசயத்தில் கையை வைத்தால்தான் இந்திய அரசு இதில் கவனம் கொள்ளும் என்று நாங்கள் கருதுகிறோம்.

     சுட்டுக் கொல்லப்பட்ட பிரிட்ஜோவின் அகவையைக் கணக்கில் கொண்டு அவரது குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும். குண்டடிப்பட்டு படுகாயம் அடைந்துள்ளவருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும்.

தமிழக மீனவரை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படை வீரரை கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும்.

     வங்காள தேசத்திற்கு ஆதரவாக பாகிஸ்தான் மீது போர் தொடுத்த இந்தியா-

தொடர்ச்சியாக இந்திய மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும் நிலையில் இலங்கை மீது போர் தொடுக்க வேண்டும்.

     மீனவர்களுக்கு அரசு துப்பாக்கி வழங்கி அதற்கான பயிற்சியையும் அளிக்க வேண்டும் என்று ருபேஷ் கூறினார். தொடர்ந்து இலங்கை அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.