Show all

சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழி பயிற்றுவிப்பு கட்டாயம்: நிர்மலா சீதாராமன்

நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழி பயிற்றுவிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும், சமசுகிருதத்தை அதில் சேர்க்க வேண்டும் என்று நடுவண் அரசிடம் மத்திய தொழில்துறை மற்றும் வர்த்தக்கத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

     சென்னையில் உள்ள சமசுகிருத கல்லூரியில் இயங்கலை வாயிலான எண்ணிம வழி படிப்புகளை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், சமசுகிருதம் எண்ணிம முறையில் கற்பிப்பதற்கான சிறந்த மொழி.

     சமசுகிருதம் பேசுவதற்கான மொழி இல்லை யென்றாலும் உலகின் பல்வேறு நாடுகளில் பேசப்படும் மொழிகளில் சமசுகிருத சொற்களை அதிகளவில் பார்க்க முடிகிறது.

     இதன் காரணமாக சமசுகிருதத்தின் பாரம்பரியத்தை காக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகளில் சமசுகிருதம் உள்ளிட்ட மும்மொழி பயிற்றுவிப்பு திட்டத்தை அமல்படுத்த மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் கோருவேன்.

     அதிகளவில், மொழிகளைக் கற்பதால் மாணவர்களின் திறன் உயரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

     1921 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் சமசுகிருதம் பேசியோர் 356 பேர். 2001ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் சமசுகிருதம் பேசத் தெரிந்தவர் ஒருவர் கூட இல்லை. தமிழ்நாட்டில் மட்டுமல்ல வடகிழக்கு மாநிலங்கள், மத்திய பிரதேசத்திற்கு அப்பால் உள்ள கிழக்கு மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர், கேரளா, குஜராத் மாநிலங்களிலும் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி சமசுகிருதம் பேசுவோர் ஒருவர் கூட இல்லை.

என்பது வரலாற்று உண்மை. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.