Show all

பணமதிப்பு நீக்கம் இந்தியாவின் வலியா? வலிமையா!

14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மோடி தலைமையிலான நடுவண் அரசு அமல் படுத்திய பணமதிப்பு நீக்கம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி போன்றவற்றால் இந்திய பொருளாதாரம் சரிவடைந்து இருப்பதையும், பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருவதையும் எதிர்க்கட்சிகள் அம்பலப் படுத்த துணிச்சல் கொண்டுள்ளன.

அதன் பொருட்டு மோடி பணமதிப்பு நீக்கம் அறிவித்த 23,ஐப்பசி (நவம்பர்-8) ஐ கருப்பு நாளாகவும், அறிவித்த நேரம் இரவு 8மணியை மெழுகுவர்த்தி ஏற்றி போராடுவது என்றும் எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

நடுவண் அரசின் இந்தத் திட்டங்களின் கொடுமைகளை எதிர்க்க துணிச்சல் கொண்டுவிட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர்களின் கூட்டத்தை நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் நடத்தினார். இதில் பணமதிப்பு நீக்கத்தை எதிர்த்து கருப்பு நாளாக கடைபிடிக்கும் வருகிற 22,ஐப்பசி (நவம்பர்-8) அன்று மேற்கொள்ள இருக்கும் திட்டங்கள் குறித்து அவர்களிடம் விளக்கினார்.

பின்னர் சரக்கு,சேவைவரி மற்றும் பணமதிப்பு நீக்கத்தின் பாதிப்புகள் குறித்து கட்சியின் மூத்த தலைவர்களுடனும் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம், டெல்லி மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், மூத்த தலைவர் அகமது படேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டங்களுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி கூறியதாவது:

பணமதிப்பு நீக்கம் ஒரு பேரழிவு. (நவம்பர்-8) இந்தியாவுக்கு சோக நாள் ஆகும். பணமதிப்பு நீக்கம் மற்றும் சரக்கு,சேவைவரியால் இந்திய பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய சேதத்தை மோடி ஏற்படுத்தி விட்டார்.

பணமதிப்பு நீக்கத்தின் முதலாமாண்டு நாளை கருப்பு பண ஒழிப்பு நாளாக நடுவண் அரசு கொண்டாட முயலும் ஆணவம், ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இதில் கொண்டாடுவதற்கு என்ன இருக்கிறது? இதனால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை குறித்து அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மாறாக இதை கொண்டாடுவது என்பது, பணமதிப்பு நீக்கம் மற்றும் தவறாக அமல்படுத்தப்பட்ட சரக்கு,சேவைவரியால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வலியை பிரதமர் புரிந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

-பணமதிப்பு நீக்கம் இந்தியாவின் வலி என்பதுதான் உண்மை. வுலிமை என்று கூறிக் கொண்டிருப்பது பாஜகவின் ஆணவப் போக்கை காட்டுகிறது. வலிதான் என்பதை இரண்டு ஆண்டுகளில் மக்கள் அவர்களுக்கு தெளிவு படுத்துவார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.