Show all

பெண் கலைத்துறையில் கால் பதிப்பதில் படிகட்டுகளை நேரலையில் உணர்த்திய ஜூலி

14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஜூலி! விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்.

அந்த நிகழ்ச்சியில் பலரும் கேட்ட போது தன்னுடைய விருப்பம் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வேண்டும் எனத் தெரிவித்திருந்தார் ஜூலி.

இந்நிலையில், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் ‘ஓடி விளையாடு பாப்பாநிகழ்ச்சியின் 6வது தெடரைத் தொகுத்து வழங்குகிறார் ஜூலி. கலா மாஸ்டர் மற்றும் கோகுல் நடுவராகப் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி, தினமும் இரவு 8.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் இடம்பெறும்.

ஜூலி ஆசைப்பட்டது போலவே தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாகிவிட்டார். இனி ஜூலியை கலைஞர் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.

-பெண் கலைத்துறையில் காலடி எடுத்து வைப்பதில் எவ்வளவு படிகட்டுகள் என்பதுதான் ஜூலி மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.