Show all

இந்திய ஒன்றியத்தைக் காட்டிலும் தமிழ்நாடு முன்னிலையில்! தனியாள் வருமானத்தில்

ஒரு நாடு எந்த அளவிற்குச் செழுமையாக இருக்கிறது என்பதைக் கணிக்க முதன்மை அளவீடாக இருக்கும் ஒன்று தனியாள் வருமானம். இந்த தனியாள் வருமான அளவீட்டில் இந்திய ஒன்றியத்தைக் காட்டிலும் தமிழ்நாடு முன்னிலையில் இருப்பது நமக்கான பெருமிதமாகும். 

22,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு மாநிலமும் பல வகையில் போராடி உயர்த்த நினைக்கும் ஒரு விடையம் தனியாள் வருமானம் ஆகும்.  

ஒரு நாடு எந்த அளவிற்குச் செழுமையாக இருக்கிறது என்பதைக் கணிக்க முதன்மை அளவீடாக இருக்கும் ஒன்று தனியாள் வருமானம். ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு மாநிலமும் இதை அதிகரிக்கத்தான் பல வகையில் போராடி வருகிறது.   

இந்த நிலையில் இந்தியா இன் பிக்சல்ஸ் என்ற கீச்சுக் கணக்கில் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களின் நிரக்கை வருமானம் என்ன? எந்த மாநிலம் அதிகப்படியான வருமானத்தைப் பெறுகிறது என்ற முதன்மையான தரவுகளைப் பகிர்ந்துள்ளதுள்ளது. 

இதில்நாம் கொண்டாடத்தக்கதானது, இந்தியாவின் நிரக்கை தனியாள் வருமானத்தைக் காட்டிலும் தமிழ்நாடு மிகப்பெரிய வேறுபாட்டில் முன்னோடியாக உள்ளது. தனியாள் வருமானம் என்றால் ஒரு மாநிலம் அல்லது நாட்டில் உள்ள மக்கள் ஒரு ஆண்டிற்கு ஈட்டும் வருமானத்தின் நிரக்கை அளவீடு ஆகும். 

ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் தனியாள் வருமானம் 2.4 லட்சமாக இருக்கும் நிலையில், இந்தியாவின் தனியாள் வருமானத்தின் அளவு 1.35 லட்சம் ரூபாயாக உள்ளது என்று தெரியவருகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,456.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.