Show all

மக்கள் உதவி கோரும் இடத்தில், மக்களை அலைகழிக்கும் நடுவண் அரசின் ஒரே பதில் முடியாது

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஓகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று நடுவண் அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம் தெரிவித்துள்ளார்.

வங்க கடலில் உருவான ஓகி புயல் கடந்த வியாழன் அன்று கன்னியாகுமரி மாவட்டத்தை தாக்கி பெரும் சேதத்தை விளைவித்தது.

20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்தன. இதனால் குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்தனர். மாவட்டமும் இருளில் மூழ்கியது. புயல் ஓய்ந்து 5 நாட்கள் ஆன பின்பும் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை.

 

கன்னியாகுமரியை புயல் கடந்து சென்றபோது கடற்கரை கிராமங்கள் சின்னாபின்னமானது. மீன்பிடி துறைமுகங்களில் நின்ற படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி உடைந்தன.

கடலில் போடப்பட்ட அலை தடுப்புச்சுவர்கள் நொறுங்கின. தூண்டில் வளைவுகளில் உள்ள ராட்சத கற்கள் தூக்கி வீசப்பட்டன. கரையில் ஏற்பட்ட இந்த பாதிப்புகளை காட்டிலும் கடலுக்குள் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

குமரி மாவட்டத்திற்கு புயல் எச்சரிக்கை வரும் முன்பே கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று விட்டனர். சின்னமுட்டம், குளச்சல், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்றவர்கள் ஒக்கி புயலின் தாக்குதலில் சிக்கிக் கொண்டனர்.

 

கடலில் சுழன்றடித்த காற்றில் சிக்கி, மீனவர்களின் விசைப்படகுகள் இழுத்துச் செல்லப்பட்டன.

லட்சத்தீவு அருகே உள்ள ஆளில்லாத பல தீவுகளில் குமரி மீனவர்களின் விசைப் படகுகள் தஞ்சம் அடைந்துள்ளன.

கேரளா மற்றும் தமிழகத்தில் மாயமான மீனவர்களில் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை 18 பேரின் உடல்கள் கேரள கடற் கரையில் கரை ஒதுங்கின.

இவர்கள் குமரி மாவட்ட மீனவர்களா? என்பதை அடையாளம் காணும் பணி நடந்தது. அப்போது ஒருவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் ஜுடு என தெரிய வந்தது. இன்னொருவர் குமரி மாவட்டம் ராமன்துறையைச் சேர்ந்த ஜெர்மியான்.

மற்றவர்களின் பிணங்களை அடையாளம் காண மாயமான மீனவர்களின் உறவினர்கள் கேரள மாநிலம் கொல்லம் மற்றும் திருவனந்தபுரத்திற்கு சென்றுள்ளனர்.

சுசீந்திரம் பழையாற்றில் பெருக்கெடுத்து ஓடிய வௌ;ளம் கரையை உடைத்து பாய்ந்ததால் குடியிருப்புகள் பாதிக்கப்பட்டன.

ஓகி புயலால் தமிழகம் மற்றும் கேரளா கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்நிலையில் ஓகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேரள மாநில அரசு கோரிக்கை விடுத்தது. புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று மாநில அரசிடம் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது. எனினும் அது அறிவிக்க நடுவண் அரசுக்கு எந்தவித திட்டமும் இல்லை. என்றார் அல்போன்ஸ்.

எடுத்ததெற்கெல்லாம் கால எல்லை நிர்ணயித்து மக்களை அலைகழிக்கும் நடுவண் பாஜக அரசு-

மக்களுக்கு ஒன்று என்றால் சொல்லும் பதில் முடியாது. திட்டம் இல்லை.

நீங்கள் என்னடா மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டு மக்களுக்கு பணியாற்றப் பணிக்கப் பட்டவர்களா? மக்களை கொத்தடிமைகளாக நடத்துவதற்கான இந்திய நாட்டின் முதலாளிகளா?

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,624

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.