Show all

கட்டுப்பாட்டுக் கோட்டை மீறி 720க்கும் அதிகமான முறை பாகிஸ்தான் படையினர் அத்துமீறித் தாக்குதல்

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கடந்த 7 ஆண்டுகளிலேயே இந்த ஆண்டு மட்டும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லைக் கோட்டை மற்றும் கட்டுப்பாட்டுக் கோட்டை மீறி 720க்கும் அதிகமான முறை பாகிஸ்தான் படையினர் அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கடந்த சில மாதங்களில் மட்டும் எல்லையோரங்களில் அமைந்துள்ள ராணுவ நிலைகள் மீதும், கிராமங்கள் மீதும் பாகிஸ்தான் படையினர் பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேலும், சிறிய ரக குண்டுகளை எறிந்தும் அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் உள்ள வீடுகள், பள்ளிகள் உள்ளிட்டவை பலத்த சேதமடைந்தன.

இந்நிலையில், இந்தியாவுடன் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்தாண்டு மட்டும் கடந்த அக்டோபர் வரையில், 724 முறை தாக்குதல் நடத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த தாக்குதல்கள் எல்லாம், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லைக் கோடு மற்றும் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதிகளில் மட்டும் நடத்தப்பட்டவையாகும்.

மேலும், பாகிஸ்தானின் இந்திய அத்துமீறலில் 12 பொதுமக்கள், 17 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 67 ராணுவ வீரர்கள், பொதுமக்கள் 12 பேர் படுகாயமடைந்து செயல்பட முடியாத நிலையில் உள்ளனர்.

இது போலவேதானே இலங்கை கடற்படையினரும் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். பட்டியலிட்டால் இதைவிட பாதிக்கப் பட்ட தமிழக மீனவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகமாக இருக்குமே அதை அரசின் சார்பாக இது போன்ற பட்டியல் எல்லாம் இடுவதில்லையே ஏன் என்று யாருக்காவது கேட்கத் தோன்றுகிறதா? தோன்றாது.

இப்படி மக்கள் மீதான நடவடிக்கையாக பாகிஸ்தானியர் காஷ்மீர் பகுதிகளில் நடத்திய நடவடிக்கைகளை இதே போன்று கண்டு கொள்ளாமல் விட்டதன் விளைவுதான்

இன்றைக்கு இராணுவ நடவடிக்கையாக பட்டியல் இட்டுக் கொண்டிருக்கிறோம். தும்பை விட்டு வாலை பிடிப்பதில் நமது ஆட்சியாளர்களுக்கு உலகில் இணை யாரும் இருக்க முடியாது.

இலங்கை விசயத்தில் இந்தியா அவலை நினைத்து உரலை இடித்தக் கதையாக இலங்கையோடு நட்பு பாராட்டிக் கொண்டிருக்கிறது. இலங்கை மீதும் இதே போன்று இராணுவ நடவடிக்கைக்கான பட்டியல் வெகு தூரத்;தில் இல்லை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,624

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.