Show all

திரிபுராவில் லெனின் சிலையை அகற்றி, தலையைப் பந்தாடி விளையாடியது பாஜக; வெற்றி களிப்பில்: தபஸ் தத்தா

22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளியான 48 மணிநேரத்திற்குள் திரிபுராவில் இருந்த லெனின் சிலையை பாஜகவினர் அகற்றியுள்ளனர். திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நீண்ட காலம் ஆட்சி செய்த இடதுசாரிகளை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது பாஜக. 

தேர்தல் முடிவு வெளியான 48 மணிநேரத்திற்குள் பாஜகவினர் செய்த செயல் அனைவரின் கவனத்தையும் திருப்பியுள்ளது. பெலோனியா நகரில் இருந்த லெனின் சிலையை பாஜகவினர் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றியுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக இருந்த சிலையை அகற்றும்போது பாரத் மாதா கி ஜெய் என்று பாஜகவினர் முழக்கமிட்டனர். சிலையை அகற்றியதை பார்த்து இடதுசாரிகள் கோபம் அடைந்தனர். பாஜகவுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிலையை நாங்கள் அகற்றவில்லை இடதுசாரிகளால் அடக்கி வைக்கப்பட்ட மக்கள் அகற்றினர் என்று பாஜக தெரிவித்துள்ளது. 

லெனின் சிலையை அகற்றி அதன் தலையை துண்டித்து பந்து போன்று பயன்படுத்தி பாஜகவினர் கால்பந்தாட்டம் விளையாடினார்கள் என்று சிபிஎம் நிர்வாகி தபஸ் தத்தா தெரிவித்துள்ளார். ஜேசிபி இயந்திரத்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். 

ரூ.3 லட்சத்தில் அமைக்கப்பட்ட லெனின் சிலை திரிபுராவில் இடதுசாரிகளின் 21 ஆண்டு கால ஆட்சியை கொண்டாடும்விதமாக ஐந்து  ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,718.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.