Show all

குலதெய்வ நேரடி வழிபாடு மாற்றி, பெருங்கோயில்களின் வளர்ச்சிக்கான பூசாரி மயமாக்கலே எண்ணிமமயமாக்கல்

22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஒரு காசுக்களத்தில் இருந்து மற்றொரு காசுக்களத்திற்கு பணம் அனுப்பும் வசதி  அடுத்த மாதத்தில் அமல்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே வாடிக்கையாளர் விவரங்களை பூர்த்தி செய்யாத நிறுவனங்களுக்கு, இது சவாலான இலக்காக உள்ளது.  காகிதப் பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு எண்ணிம பரிவர்த்தனைகள் அதிகரித்தன. ஆதாயஅட்டைப் பயன்பாடு உடனடியாக நான்கு மடங்கு உயர்ந்தது. ஆதாயஅட்டைப்  பயன்பாடு சாத்தியமற்ற கிராம பகுதிகளில் காசுக்களஙகள் கொடுத்தன. இதனால் செல்பேசி காசுக்களங்கள் பயன்பாடு கிடுவென அதிகரித்தது. 

குறிப்பாக, இந்த நிறுவனங்கள் அளித்த தள்ளுபடி அறிவிப்புகள், பணந்திருப்புச் சலுகைகள் மக்களை ஈர்த்ததால் மிடுக்குப் பேசி வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் காசுக்களம் பயன்படுத்த தொடங்கினர்.

இவ்வாறு காசுக்களம் பயன்படுத்துவோரிடம், கேஒய்சி எனப்படும் வாடிக்கையாளர் விவரங்களை நிறைவு செய்ய ரிசர்வ் வங்கி கெடு விதித்திருந்தது. இதன்படி வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் எண் போன்ற சான்றினை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் ஏறக்குறைய 90 விழுக்காட்டுப் பேர் இவற்றை சமர்ப்பிக்கவில்லை. இதற்கே இந்த நிறுவனங்கள் போராடி வருகின்றன. கெடுவை நீடிக்கவும் ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது. 

இந்நிலையில், இதற்கு அடுத்த கட்ட வசதியாக காசுக்களங்களுக்கிடையே பண பரிவர்த்தனை செய்யும் வசதியை அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி முடிவு செய்திருந்தது. 

இதனால் வாடிக்கையாளர்களுக்கு வசதி மட்டுமின்றி, பல்வேறு காசுக்களம் பயன்படுத்தும் வியாபாரிகளுக்கும் எளிதாக இருக்கும். வங்கி கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்குக்கு பணம் அனுப்புவதை போல, காசுக்களத்தில் இருந்து வங்கி கணக்கிற்கும் பணம் அனுப்பலாம். பேமன்ட் வங்கி போல இதை பயன்படுத்தலாம். 

இதுகுறித்து காசுக்கள நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: காசுக்களத்தில் கேஒய்சி விதிமுறைகளின்படி வாடிக்கையாளர்கள் விவரங்களை நிறைவு செய்ய கெடுவை நீட்டிக்க ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டது. இதுவரை காசுக்களங்கள் மூலம் ரூ.12,000 கோடி பரிவர்த்தனை நடந்துள்ளது. 

ஆனால் கேஒய்சி நிறைவு செய்யாததால் 80 விழுக்காட்டினர் காசுகளம் பயன்பாட்டை இழக்கும் அபாயம் உள்ளது. காசுக்களம் நிறுவனங்களில் பணிபுரியும் பலர் அடிக்கடி வேலை மாற்றிக்கொண்டிருப்பவர்கள். இவர்களில் பலர் கேஒய்சி விதிமுறையை வாடிக்கையாளர்களிடம் பெறுவதில் முனைப்பு காட்டுவதில்லை. கேஒய்சி நிறைவு செய்ய விரும்பாத வாடிக்கையாளர்கள் பயன்பாட்டை நிறுத்திவிட்டனர். இந்த நிலையில் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தவாறு, அடுத்த மாத இறுதிக்குள் காசுக்களங்களுக்கிடையே பணம் அனுப்பும் வசதி சாத்தியமாவது சவலாவான பணிதான். இதற்கு காசுகள நிறுவனங்களிடையே வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும். இந்த வசதி வந்தால் நிச்சயம் பயன்பாடு எண்ணிக்கை அதிகரித்து காசுக்கள நிறுவனங்களுக்கு பெரும் வளர்ச்சியாக அமையும் என்றார்.

எங்கும், யாரிடமும், எந்த நேரத்திலும் செல்லுபடியாகும் காகிதப்பணம் என்பது தனிமனிதனின் அதிகாரமாக இயங்கிய நிலையில், அதற்கான காகிதப் பண அச்சடிப்பு, கள்ள பணத்தாள்களிடமிருந்து பாதுகாப்பு என்கிற அரசின் செலவு, மற்றும் நிருவாகங்களை தனியாருக்கு தாரை வார்த்து, அந்தச் செலவு நிருவாகங்களின் சுமையை மக்கள் தலையிலேயே கட்டும் நடவடிக்கைதான் எண்ணிம மயமாக்கலின் உள்நோக்கம்.

கடவுளை நேரடியாகச் சந்தித்து மகிழும் குலதெய்வக் கோயில் நடவடிக்;கைளை மாற்றி, பெருங்கோயில்களின் வளர்ச்சிக்கான பூசாரி மயமாக்கல்தான் மோடி அரசின் அடிப்படை! 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,718.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.