Show all

இன்னும் 3 கிழமைகள் மட்டுமே உள்ள நிலையில் வாழ்த்துக்கள் போதாது இல.கணேசன்

22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று நடுவண் மோடி அரசை வலியுறுத்தி அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கைகோர்த்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

காவிரி விவகாரத்தில் உச்சஅறங்கூற்றுமன்றம் தீர்ப்பளித்தும் காவிரி மேலாண்மை வாரியத்தை நிறைவேற்றுவதாக தெரியவில்லை. இந்தத் தீர்ப்புக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா எதிர்ப்பு தெரிவிப்பது, பல்வேறு தீர்ப்புகளில், தண்டனை பெற்று சிறையில் அவதியுறும் பல ஆயிரம் கைதிகளையும், அவர்களுக்கு தண்டனை வழங்கிய இந்திய சட்ட அற அமைப்பiயும் கேலிக்கூத்தாக்குவதாகும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் நடுவண் அரசின் விரைவை கட்டாயப் படுத்தும் முகமாக சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தலைமை அமைச்ச்;ரைச் சந்தித்து வலியுறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. 

எனினும் அனைத்துக் கட்சி தலைவர்களைத் தலைமை அமைச்சர் சந்திக்க மறுத்துவிட்டதாகவும் துறை அமைச்சரை சந்திக்குமாறு வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், காவிரி விவகாரத்தில் இன்று தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். எதிரும் புதிருமாக உள்ள அதிமுகவும், திமுகவும், காவிரி விவகாரத்தில் அண்மைகாலமாக இணைந்து வருகின்றனர். இவர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் வாழ்த்துகளை தெரிவித்தார். 

இன்னும் 3 கிழமைகள் மட்டுமே உள்ள நிலையில் வாழ்த்துக்கள் போதாது இல.கணேசன்! உங்கள் மோடியின் நடுவண் அரசுக்கு உணர்வுப் பூர்வமாக  அழுததம் கொடுங்கள் கணேசன்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,718.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.