Show all

கௌரி லங்கேஷை கொலை செய்த கொலையாளிகளின் வரைபடம்

இன்று 28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மூத்த பெண் இதழியலாளர் கௌரி லங்கேஷ் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ராஜராஜேஸ்வரி நகரில் அவரது வீட்டுக்கு வெளியே சுட்டுக்கொல்லப்பட்டார்.

கடந்த 20,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5119. (05.09.2017) நடந்த இந்தக் கொலை நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இக்கொலை குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக முதல் முறையாக இதழியலாளர் சந்திப்பு நடைபெற்றது. சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் மூன்று வரைபடங்கள் மற்றும் கண்காணிப்பு படக்கருவி பதிவை வெளியிட்டனர்.

கொலையாளிகள் ஒரு வாரத்திற்கு கௌரி லங்கேஷை கண்காணித்து வந்தனர், பல்சர் பைக்கில் அப்பகுதியில் சுற்றிவந்தனர், கொலையாளிகள் 25முதல் 30அகவை உடையவர்கள், 7.6மி.மி வகை துப்பாக்கி மூலம் கொலை செய்துள்ளனர் என என்று பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொலையாளிகளைப் பார்த்தவர்கள் கூறிய அங்க அடையாளங்களைக் கொண்டு இரண்டு ஓவியர்களால் முகப்படங்கள் வரையப்பட்டுள்ளன. இரு ஓவியர்களும் ஒரே போன்ற படங்களை வரைந்துள்ளனர்.

பொதுமக்கள் இந்த வரைபடங்களைக் கொண்டு கொலையாளிகளை அடையாளம் கண்டால் காவல்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.