Show all

பாஜகவிற்கு ஒரு திரைப்பட நிறுவனம் இருந்திருந்தால் ‘பொய்யின் இருப்பிடம்’ என்றே பெயர் விளங்கியிருப்பார்கள்: ராகுல்

08,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்ட பின்னர், நேற்று அவரது தலைமையில் முதல்முறையாக அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘குஜராத் மாதிரி வளர்ச்சி என்பதே பொய்யானது. குஜராத் மக்களிடம் நான் பேசும்போது வளர்ச்சியே இல்லை என்று தெரிவித்தனர். பாஜகவின் அடித்தளமே பொய்யானது. பாஜக தலைவர் அமித் ஷா மகனின் நிதி முறைகேடுகள் குறித்த கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்கவில்லை. 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் அறங்கூற்றுமன்றத் தீர்ப்பின் மூலம் உண்மை வெளியே வந்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கொள்கைகளை பாஜக திரித்துக் கூறியது என்றார்.

இந்நிலையில், இன்று தனது கீச்சு பக்கத்தில், “பாஜகவுக்கு மட்டும் ஒரு திரைப்பட நிறுவனம் இருந்திருந்தால் அதற்கு ‘லை ஹார்டு என்றே பெயர; வைக்கவேண்டியதிருந்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். ராகுலை ஆதரித்தும், பாஜகவை எதிர்த்தும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

‘டை ஹார்டு என்பது பிரபல மேற்கத்திய திரைநிறுவனம். அந்தப் பெயரைச் சார்ந்து ‘லை ஹார்டு என ராகுல் குறிப்பிட்டிருக்கிறார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,645

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.