Show all

ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம் பரவும் புதிய டிஜிமைன் கிரிப்டோகரன்சி மைனிங் வைரஸ்

புதிய டிஜிமைன் கிரிப்டோகரன்சி மைனிங் எனும் வைரஸ் ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம் பரவி வருகிறது. இந்த வைரஸ் முதன் முதலாக தென் கொரியாவில் இருந்து தான் பரவியுள்ளது. இது தொடர்பாக டோக்கியோவை சேர்ந்த ட்ரெண்ட் மைக்ரோ எனும் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இதன் தங்கங்கள் பற்றி அறிவித்துள்ளது. தென் கொரியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், உக்ரைன் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் இதன் பாதிப்புகள் அதிகமாக உள்ளது. மேலும் இந்த வைரஸ் இந்தியாவையும் தாக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வைரஸ் ஜிப் செய்யப்பட்ட வீடியோ பைல் போன்று உங்கள் மெசஞ்சருக்கு வரும் அதை நீங்கள் கிளிக் செய்து விட்டால் இந்த வைரஸ் உங்கள் கணினியை தாக்க ஆரம்பித்து விடும். முதலில் கூகுள் குரோமில் சில அப்டேட்களை தானாக செய்து உங்கள் ஃபேஸ்புக் மற்றும் மெயிலில் உள்ள விவரங்களை எடுத்து கொள்ளும். மேலும் உங்கள் ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம் உங்களின் நண்பர்களுக்கும் இந்த வைரஸை அனுப்பி விடும். பிறகு உங்கள் கணினி முழுமையாக அந்த வைரஸின் கட்டுப்பாட்டிற்கு சென்று விடும். அதன் பிறகு நீங்கள் ஏதேனும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்தால் உங்கள் விவரங்கள் மூலம் அனைத்தும் திருடப்படும்.  மேலும் இதுகுறித்து குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த வைரஸ் நம்முடைய மொபைல் மெசேஞ்சர் அப்ளிகேஷனின் மூலம் பரவாது. மாறாக கணினியில் மெசேஞ்சர் பயன்படுத்தும் போது மட்டுமே பரவும். முக்கியமாக கூகுள் குரோமில் மெசேஞ்சர் பயன்படுத்தினால் இந்த வைரஸ் தாக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே கணினியில் ஃபேஸ்புக் மெசஞ்சர் பயன்படுத்துவோர் உங்கள் கணினியை சோதனை செய்து கொள்ளுங்கள். மேலும் சிறிது நாட்களுக்கு கவனமாக இருங்கள். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.