Show all

அடேங்கப்பா பாஜக! நான்காவது நம்பிக்கை இல்லாத் தீர்மான கவனஅறிக்கையையும் கிடப்பில் போடுமா

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக, நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இன்று மக்களவையில் கவனஅறிக்கை அளித்துள்ளது.

ஏற்கனவே, முதல்வர் சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், காங்கிரஸ் ஆகியவை கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர கவனஅறிக்கை அளித்துள்ள நிலையில், இப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கவனஅறிக்கை அளித்துள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தெலுங்கு தேசம்கட்சி , ஆந்திர மாநிலத்துக்கு சிறப்புத் தகுதியும், நிதித் தொகுப்பும் வழங்காததைக் கண்டித்து கூட்டணியில் இருந்து வெளியேறியது. இதையடுத்து, நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர மக்களவை தலைவரிடம்; தெலுங்கு தேசம் கட்சி கவனஅறிக்கை அளித்தது.

இதற்கிடையே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர கடந்த வாரம் கவனஅறிக்கை அளித்து. ஆனால், கடந்த வாரத்தில் மக்களவையில் தொடர் அமளி நிலவியதன் காரணமாக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படவில்லை. மேலும், காங்கிரஸ் கட்சியும் இது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை கவனஅறிக்கை அளித்துள்ளது. இதனால் 3 கட்சிகள் அளித்துள்ள கவனஅறிக்கைகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைத் தலைவர் பி.கருணாகரன் இன்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனிடம் பாஜக அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர கவனஅறிக்கை அளித்தார். மக்களவை நாளை வழக்கம் போல் செயல்பாட்டு வரும் போது, இந்த கவனஅறிக்கை எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

ஏற்கனவே 3 கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கவனஅறிக்கை அளித்துள்ள நிலையில், ஆளும் பாஜகவுக்கு மேலும் நெருக்கடி அளிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்த கவனஅறிக்கை அளித்துள்ளது.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,738.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.