Show all

இந்த ஆண்டின் மிகப் பெரிய உலக அறிவாளி! விலங்குகள், பறவைகளுக்கு அண்டாவிலும் குண்டாவிலும் தண்ணீர்

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சியில் தலைமை அமைச்சர் மோடி நேற்று பேசும்போது, பள்ளி பொதுத் தேர்வு, விடுமுறை காலம், தண்ணீர் சேமிப்பு போன்றவை பற்றி எனக்கு மாணவ-மாணவிகள் கடிதம் எழுதி உள்ளனர். குழந்தைகளும் கடிதம் எழுதி இருக்கிறார்கள்.

குறிப்பாக கோடை காலத்தில் விலங்குகள், பறவைகளுக்கு தண்ணீர் கிடைப்பதில் காணப்படும் சிக்கல் குறித்த கவலையுடன் பலர் கடிதம் எழுதி உள்ளனர். அவற்றின் தாகத்தை போக்க அனைவரும் தங்களது வீடுகளுக்கு முன்பாக பாத்திரங்களில் குடிநீரை நிரப்பி வையுங்கள். விலங்குகள், பறவைகளின் தாகம் தணியும்' என்றார். 

காவிரியிலே ஒழுங்கா தண்ணீர் விட்டா எத்தனை கோடி உயிரினங்களின் தாகம் தீரும். அண்டாவிலும் குண்டாவிலும் தண்ணீர் வச்சா கொசுதாம்பா வளரும்! இதுதான் உன்னுடைய தூய்மை இந்தியாவா! 

இந்த அறிவை வச்சிக்கிட்டு நீங்க நீட் தேர்வு வைக்கிறது நாங்க மருத்துவராவரதா? 

நீங்க  பண்ற அட்டகாசம் சொரணையே இல்லாத மன நோயளிக்குக் கூட கோபத்தை உண்டு பண்ணீருமேப்பா!

அடப்பாவி மனுசா! விலங்கு, பறவைகளுக்கு மட்டுமல்ல பயிர்களுக்கும், மனித உயிர்களுக்கும் சேர்த்து தண்ணீர் கேட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமை என்று நாடே அல்லோகல்லோல பட்டுக் கொண்டிருக்கிறது. ஒன்னுமே தெரியாத ஊர்மேயி போல விலங்குகளுக்கு அண்டாவிலும் குண்டாவிலும் தண்ணீர் வைக்கச் சொல்லி வெறுப்பேத்தறியேப்பா! மனுசனா மரமண்டையா நீ! என்று தமிழ் மக்கள் காடுப்பாகி கிடக்கிறார்கள்.

இந்த ஆண்டின் மிகப் பெரிய உலக அறிவாளி! விலங்குகள், பறவைகளுக்கு அண்டாவிலும் குண்டாவிலும் தண்ணீர் வைக்கச் சொல்லியிருக்கிறார். தெர்மாகூல் முயற்சியை விட மிஞ்சிய அறிவாற்றல்! 

தூய்மை இந்தியா என்று அக்கம் பக்கம் நீர் தேங்கியிருந்ததற்காக எத்தனை நிறுவனங்களுக்கு எத்தனையோ கோடி அபராதம் விதித்து விட்டு, காவிரியை முடக்கி இயற்கையையே சீரழித்து விட்டு, பறவை, விலங்குகளுக்கு பாத்திரங்களில் தண்ணீர் வைக்கும் அறிவு ரொம்ப நேர்த்தி. 

இவ்வளவு அறிவான தலைமை அமைச்சரை நாம் தெரிந்தெடுத்ததற்காக உலகமே இனி இந்திய மக்களைப் பாராட்டப் போகிறது.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,738

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.