Show all

புதிய புதிய கோணங்களில் சீமானைப் புடம் போடும் ஊடகங்கள்

14,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சீமானே தமிழக மக்களுக்கான அடுத்த சரியான மாற்று என்று, ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், ஆர்வத்துடனும், அச்சத்துடனும் அம்பறாத்தூணிகளில் கேள்விக் கணைகளை சுமந்தவாறு, ஆதரவு நிலைகளிலும் எதிர் நிலைகளிலும் பயணிக்கின்றனர். 

தமிழன் மதமில்லாதவன், அப்படி அவனை மதத்திற்குள் அடைக்க முயன்றாலும் சமயம் என்ற தலைப்பில் தான் அவனை வகைப்படுத்த முடியும். தமிழன் வழிபாடு, முன்னோர் ஆற்றலைப் போற்றிக் கொள்ளும் நடுகல் வழிபாடு. இன்றைக்கு சிலை வணக்க பக்தி மார்க்கத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்ட முருகன், இறையனார் என்கிற சிவன் எல்லாம், தமிழர்களோடு வாழ்ந்திருந்த தமிழ் முன்னோர்களே. நடுகல்வழிபாடு இலிங்க வணக்கமாக மடைமாற்றம் ஆரியர்களால் செய்யப் பட்டு விட்டது. ஹிந்து என்கிற தலைப்பிற்குள் தமிழனை உட்படுத்தவே முடியாது என்கிற சீமானின் வாதத்தை செவிமடுக்கவே முயாலாது, 

சீமான் ஹிந்து அல்ல என்றும், கிறிஸ்துவரான தனது அடையாளத்தை அவர் மறைக்கிறார் என்றும் பேச்சுகளை கிளப்பி விடுகின்றனர் எதிர் நிலையாளர்கள். 
அதற்கு அவர் பதில் அளிக்கையில், ஈழம் என்பது அரசியல் அல்ல அவசியம் என்பேன். ஈழ விடுதலை என்பது என் இனத்தின் விடுதலை என்பேன். தமிழ்நாட்டுக்கென்று ஒரு தனி அமைப்பில்லை. அதை பேசுவதே பைத்தியக்காரத்தனமாக சித்தரிப்பு இருக்கும் நிலையில், கமல், ரஜினி போன்றோர் எதிர்த்து பேசியிருக்க வேண்டியது நடுவண் அரசைத்தான். 
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ11,400 கோடியை எடுத்துக் கொண்டு சென்ற நீரவ் மோடியை கமல் எதிர்க்கவே இல்லை. கமல் என்னுடன் கூட்டணிக்கு வந்தால் ஏற்பேன். முருகனை போற்றுவது மரபு அவர் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் வரட்டும். ஆனால் எங்கள் கொள்கைகளை ஏற்க வேண்டும். என்னுடைய கொள்கை எனக்கு இந்த நிலமும் அதிகாரமும் தேவைப்படுகிறது. முருகனை போற்றுவது எனது இன மரபு. நான் தமிழன்தான் எனது பெயர் சீமான். ஆனால் என்னை சைமன் என்றும் கிறிஸ்துவர் என்றும் கூறிவருகின்றனர். 

எடப்பாடி ஆட்சிக்கு 100-க்கு எத்தனை மதிப்பெண் போடுவீர்கள் என்று கேட்கிறீர்கள். இந்தத் தாளை நான் திருத்தவே மாட்டேன். அவர்களைக் குறை சொல்லி ஒன்றும் இல்லை. பினாமி பாஜக ஆட்சி இது ஜெயலலிதா ஆட்சியின் நீட்சி. தற்போது பாஜகவின் பினாமி அரசு. அதிமுகவின் இரு அணிகளையும் இணைத்ததே பிரதமர்தான் என்று பன்னீர் கூறுவதிலேயே தெரிகிறது. இதில் தலையிட்டவர்கள் ஆட்சியிலும் தலையிட்டு கருத்து சொல்லியிருக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,710

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.