Show all

சிறுநீர் வங்கி உருவாக்க, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி ஆலோசனை

28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடுவண் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியதாவது:

இந்தியா முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் சிறுநீர் வங்கி உருவாக்க வேண்டும். அப்படி சேகரிக்கும் சிறுநீரிலிருந்து யூரியா எடுத்து வேளாண்மைக்குப் பயன்படுத்த வேண்டும். சிறு நீரில் நைட்ரஜன் சத்துக்கள் இருப்பதால் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற உரங்களுக்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம்.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் யூரியா லாபகரமான நடவடிக்கையாக இருக்கும். யூரியா உற்பத்திக்காக செலவழிப்பது பொருளாதார ரீதியாக பயன் தரும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சுவீடன் அறிவியல் ஆய்வாளர்கள் மனிதர்களின் சிறுநீரை பரிசோதனை செய்ததில் அதில் நைட்ரஜன் சத்துக்கள் அதிகமாக இருப்பதாக கூறியுள்ளனர். இனி வரும் காலங்களில் வேளாண்மையில் உரத்திற்கு பதிலாக சிறுநீரை பயன்படுத்தலாம். மனித சிறுநீரில் அதிக நைட்ரஜன் உள்ளது. ஆனால் அது வீணாகிறது. நாம் ஏற்கனவே பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றிற்கு மாற்றாக கரிம மாற்றுகளை பயன்படுத்துகிறோம். நாம் நைட்ரஜனை சேர்க்க முடியும் என்றால் ஒரு ஆலையை உருவாக்க முடியும்.

இவ்வாறு நிதின் கட்காரி கூறியுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,606

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.