Show all

கோமளியை அவர் கூடாரத்திலேயே சந்திக்கக் கிளம்பி விட்டார்! நேபாள பிரதமர் சர்மா ஒலி இந்தியா வருகை

23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மோடி அரசின் ரூபாய் தாள் செல்லாது அறிவிப்பால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீள முடியாமல் அண்டை நாடுகளான நேபாளம், பூடான் விழிபிதுங்கி நிற்கின்றன. இந்த விவகாரம் குறித்து பேசுவதற்காக நேபாள பிரதமர் சர்மா ஒலி இந்தியா வருகை தந்துள்ளார். மோடி ரூ500, ரூ1,000 ரூபாய்தாள்கள் செல்லாது என நள்ளிரவில் திடீரென அறிவித்தார். இது தேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மக்களிடையே பணப்புழக்கம் இல்லாமல் வங்கிகளிலும் ஏடிஎம் மையங்களிலும் கால்கடுக்க நின்று செத்து மடிந்த சோகங்கள் அரங்கேறின

கறுப்பு பணத்தை ஒழிக்கத்தான் இந்த நடவடிக்கை என முழங்கினார் மோடி. ஆனால் கருப்புப் பணம் ஒழிக்கப் பட்டதற்கான எந்த ஒரு விவரமும் இல்லை; தெரிவிக்கப்படவும் இல்லை. ஒன்றரை ஆண்டுகளாக ரூபாய் தாள்களை  எண்ணுகிறோம் என ரிசர்வ் வங்கி கூறுகிறது. திருப்பதியில் உண்டியில் எண்ணுகிறவர்களையாவது துணைக்கு அழையுங்கள் என்றெல்லாம் நையாண்டி செய்து முடித்தாயிற்று. 

இந்த நடவடிக்கையில், மோடியை முகமது பின் துக்ளக் போன்ற கோமாளியாகவே நிதி ஆலோசகர்கள் சித்தரிக்கிறார்கள்.

இந்த ரூபாய் தாள் செல்லாது அறிவிப்பால் இந்திய பணம் புழங்கும் நேபாளம், பூடான் நாடுகளிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நாடுகளில் இந்திய பணம் ரூ500, ரூ1,000 ரூபாய்தாள்களை வைத்திருந்தவர்கள் அரசிடம் ஒப்படைத்தனர். ஆனால் இந்த பழைய ரூபாய் தாள்களுக்கு மாற்று குறித்து மோடி அரசு இதுவரை முறைப்படியான எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை. நேபாளத்தில் மட்டும் ரூ950 கோடி இந்திய பணத்தை அந்நாட்டு அரசு கையில் வைத்திருக்கிறது. இதற்கு பதிலாக புதிய ரூபாய் தாள்கள் தருமாறு தொடர்ந்து அந்த நாடு கேட்டுப் பார்த்தது. ஆனால் டெல்லி பாஜக அரசு இதைப்பற்றி கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. இதனால் வேறுவழியின்றி நேபாள பிரதமர் சர்மா ஒலி இன்று டெல்லிக்கு வருகை தந்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,749.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.